கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை
தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 2025-2026-இல் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது
முக்கிய அம்சங்கள்:
போனஸ் சட்டத்தின் கீழ் வரும் சங்கங்கள்: ஒதுக்கப்படக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு, அச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) வழங்கப்படும்
. உபரி தொகை இல்லாத சங்கங்கள்: உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தீபாவளிப் பண்டிகையினைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு ஏதுவாக, 10 விழுக்காடு மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்
. குறைந்த பணியாளர்கள் கொண்ட, இலாபம் ஈட்டும் சங்கங்கள் (போனஸ் சட்டத்தின் கீழ் வராதவை): நிகர இலாபம் ஈட்டும் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்
. இலாபம் ஈட்டாத சங்கங்கள் (போனஸ் சட்டத்தின் கீழ் வராதவை): தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக,
தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3,000/-ம்
, தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம்
வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
மொத்தப் பயனாளிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு:
இந்த ஆணையின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் 44,081 பணியாளர்களுக்கு
அரசின் இந்த நடவடிக்கை கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் ஆர்வம், ஈடுபாடு மற்றும் ஊக்கத்துடன் பணியாற்றுவதையும்