தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை (Ex-Gratia) வழங்கத் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணை, 2024-25 ஆண்டுக்கான மிகை ஊதியத்தை வழங்குகிறது



முக்கிய விவரங்கள்

  • மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் , தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு ஊழியர்கள் , மற்றும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப் பணியாளர்களுக்கு இது வழங்கப்படும்.

  • தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக , அவர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

  • இதன் அடிப்படையில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் 24,816 தகுதியுடைய நபர்களுக்கு ரூ. 40.62 கோடி செலவில் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

அரசின் நோக்கம்

அரசின் இந்த நடவடிக்கை, டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மிகவும் ஈடுபாட்டுடனும், ஊக்கத்துடனும் பணியாற்றுவதையும், எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதையும் உறுதி செய்திட வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post

Contact Form