மாட்டுப்பொங்கல் பின்னால் இப்படி ஒரு சுவாரஷ்யமா? அவசியம் படியுங்கள்..

கைலாயத்தில் ஒருநாள்..
சிவபெருமான் நந்தீசுவரரை அழைத்து அவரிடம் ஒரு கட்டளை பிறப்பித்து “நான் சொல்வது படி செய்” என்றார்.

‘‘பூலோகம் சென்று அங்கு உள்ள மக்களை சந்தித்து, அங்குள்ள பஞ்சம் தீரவேண்டும் என்றால் மாதம் ஒருமுறை உணவு சாப்பிட்டு மாதம் முழுவது எண்ணெய் தேய்த்து குளிக்க சிவன் சொன்னார்” என்று சொல்லு என்று ஒரு கட்டளையை பிறப்பித்தார் சிவன்.

நந்தீசுவரரோ சிவன் கூற வந்ததை விளங்கிக்கொள்ளாமல், “அது எப்படி மனிதர்களால் ஒருநாள் மட்டும் உணவருந்தி உயிர்வாழ முடியும்” என்று தனக்குள்ளேயே பிதற்றிக்கொண்டு விளங்கியது போல் ‘ஆமாம்’ என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு சென்றார் பூலோகத்துக்கு. ஏற்கனவே குழப்பத்தில் இருந்த நந்தீஸ்வரர் வரும் வழியிலேயே சிவன் கொடுத்த கட்டளையின் ஒரு பாதியை மறந்து விட்டார். அப்படியே மக்களிடம் சென்று, ‘‘மாதம் முழுவதும் உணவு உண்ணுங்கள், அதேபோல் மாதம் ஒருமுறை மட்டும் எண்ணெய் தேய்த்து குளியுங்கள் இது எம்பெருமான் சிவனின் கட்டளை’’ என்று சிவன் கூறியதையே மாற்றிக் கூறிவிட்டார்.

இதனை பின்பற்றியதால் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் இப்படி பசியால் வாடுவதற்கு நந்தீசுவரர் நான் சொன்னதை மக்களிடம் ஒழுங்காக கொண்டு சேர்க்காதது தான் காரணம் என்று சிவபெருமான் கடும் கோபம் கொண்டார். உடனே இதற்கு பிராயச்சித்தமாக ‘‘நீ காளையாக மாறி பூலோகத்துக்கு செல்வாயாக, மக்களின் வறுமை நீங்க நீ மக்களுக்காக கடுமையாக உழைப்பாயாக’’ என்று நந்தீசுவரருக்கு கட்டளையிட்டார்.

தன் தவறை உணர்ந்த நந்தீசுவரர், ‘‘நான் செய்தது தவறுதான் ஆதலால் இந்த தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். மக்களுக்காகவே இறுதிவரை உழைத்து ஓடாய் தேய்வேன். ஆனால் மக்களுக்காக உழைக்கும் எனது உழைப்பை மக்கள் பாராட்டி சிறப்பிக்கும் வண்ணமாக ஒரு நாள் விழாவாக கொண்டாட வேண்டும். அதற்கு மட்டும்  அருள் புரியுங்கள்’’ என்று சிவபெருமானிடம், கைக்கூப்பி கேட்டுக்கொண்டார்.

அதற்கு சிவன், வருடம்தோறும் தை மாதம் 2-ம் நாள் மக்கள் ‘மாட்டுப் பொங்கல்’ கொண்டாடி உனது உழைப்பை போற்றுவார்கள் என்று கூறினார். இதை கேட்டு மகிழ்ச்சியடைந்த நந்தீசுவரர் பூலோகத்துக்கு காளை வடிவத்தில் வந்து, விவசாயத்துக்கும், உழவர்களுக்கும் கொஞ்சம் கூட  களைப்பில்லாமல் உழைத்து வருகிறார். அப்படி மக்களுக்காக தனது வியர்வையை சிந்தும் நந்திக்காக கொண்டாடுவதே இந்த மாட்டுப்போங்கள் என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *