பல வியாதிகளுக்கு நிவாரணம் தரும் இயற்கை மருந்து பிரண்டை….!!

பிரண்டையின் தண்டுப்பகுதியும் வேர்ப்பகுதியும் எலும்பு முறிவுக்கு மகத்தான மருந்து. ‌இதன் தண்டு மற்றும் வேர்ப்பகுதியையும் அரைத்து ஆல்கஹாலுடன் கலந்து எலும்பு முறிவு பகுதியில் பற்றிட்டு கட்டு கட்டினால் எலும்பு முறிவு குணமாகும். உடன் இதன் சாற்றையும் அருந்தினால் விரைவில் குணம்பெறலாம்.‌‌பிரண்டைத் துவையலை முதுகு வலியால் பாதிக்கப்பட்டோர் தண்டுவடத்தில் பிரச்சனை உள்ளோர் எடுத்துக்கொண்டால் குணம் பெறலாம். ‌உடல் வலியால் அவஸ்தைப் படுபவர் பிரண்டைச்சாற்றை அருந்தினால் வலியிலிருந்து விடுபடலாம்

‌ஆயுர்வேத மருத்துவத்தில் முடக்குவாத நோய்களுக்கு (ஆர்த்தரிடிஸ்) பிரண்டைச்சாறு முக்கியப் பங்காற்றுகிறது. ‌மாதவிடாய் நின்றதும் பெண்கள் எலும்புகள் அரித்து துளைகளாக மாறி எலும்பு எளிதில் முறிந்து விடும். பிரண்டையை பயன்படுத்தினால் எலும்புகள் வலுவாகும்.‌பிரண்டைச்சாறு பல் ஈறுகளில் இரத்தம் கசியும் ஸ்கர்வி நோயை குணப்படுத்துகிறது. பிரண்டைச்சாறு ஆஸ்மாவுக்கு மருந்தாக பயன்படுகிறது.‌‌மூக்கில் இரத்தம் வடியும் பிரச்சனை உள்ளவர்கள் பிரண்டைச்சாறு அருந்தினால் விடுபடலாம். கால்நடைகளுக்கு தீவனத்துடன் பிரண்டையை தருவதால் பால் சுரப்பு அதிகமாகிறது‌.‌‌பிரண்டைச்சாறு சுக்கு மிளகு கொதிக்க வைத்து அருந்த உடல்வலிக்கு அருமருந்து. ‌பிரண்டை இலை மற்றும் பிஞ்சித்தண்டை நிழலில் உலர்த்தி அரைத்து அஜீரணத்திற்கு சாப்பிட செரிமானாம் அதிகரிக்கும்.‌‌பிரண்டை குடல்புழுக்களை அழிக்கிறது, பசியைத் தூண்டுகிறது வயிற்று உபாதைகளுக்கு எதிராக செயல்படுகிறது. ‌தோல் நோய்கள், தொழுநோய், இரத்தப்போக்கு, கால் கை வலிப்பு, வலிப்பு நோய், நாள்பட்ட புண்கள், வீக்கம். ஆகியவற்றிற்கும் அருமருந்து.‌‌உடல் எடை வயிற்றைக் குறைக்க உதவுகிறது. ‌நன்கு பருத்த பிரண்டைத்தண்டை துவையலை மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசத்திற்கும் பயன்படுத்தலாம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *