இடுப்பு வலி வந்தால் சாதாரணமாக நினைக்காதீர்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.இடுப்பு வலி வந்தால் நீண்ட நேரம் அமர்வதால் தான் என சாதாரணமாக எண்ணி அதிகமானோர் விட்டு விடுவார்கள்.கொஞ்ச நேரம் வேலை பார்த்தாலே இடுப்பு வலி மற்றும் உடல் சோர்வு உள்ளதா அப்படினா இதை மட்டும் சாப்பிடுங்க போதும் BACK PAIN காணாமல் போய்விடும்.ஆனால் அடிக்கடி இடுப்பு வலி வருகின்றதென்றால் அது நம் உடலில் ஏதோ ஒரு பிரச்சனையை குறிக்கிறது என்று அர்த்தம்.
எனவே இடுப்பு வலி வந்தால் நீங்கள் உடனே அதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை சரிசெய்யும் முயற்சியைக் கையாளுங்கள்.இடுப்பு வலி ஏற்டுவதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது கடுமையான இடுப்பு வலி வரும், அது சிறுநீர்ப்பாதையில் தொற்று இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. அவ்வாறு சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்பட்டிருந்தால் ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டும், இல்லையெனில் அது சிறுநீரகங்களை அதிகமாக பாதிக்கும்.இடுப்பு வலியுடன் கூடிய வயிற்றுப்போக்கு மற்றும் அதனுடன் காய்ச்சல் இருப்பின், அது பெருங்குடல் அழற்சிக்கான காரணமாகவும் இருக்கலாம். இந்நிலை இப்படியே தொடர்ந்தால், உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி பாதித்து விடலாம். எனவே ஆரம்பத்திலேயே இந்த மாதிரி அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
வயதான காலத்தில் வரும் இடுப்பு வலிக்கு காரணம், அது ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையின் அறிகுறியாகும். எனவே தவறாமல் மருத்துவரைச் சந்தித்து, உங்கள் பிரச்சனையைக் கூறித் தீர்வு காணுங்கள்.சிலருக்கு வலது பக்க அடிவயிறு கடுமையாக வலிக்கும், அதனுடன் காய்ச்சல், வாந்தி ஆகியவை இருந்தால், அது குடல் வால் அழற்சி இருப்பதை உணர்த்துகிறது. இந்த அழற்சியைத் தடுக்க ஒரே வலி, அறுவை சிகிச்சை மட்டுமே ஆகும் .பால்வினை நோய்கள் உங்களுக்கு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளுள் ஒன்று இடுப்பு வலி. எனவே, இந்த மாதிரியான வலி உங்களுக்குத் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். இல்லையெனில், இந்த நோய் உங்கள் துணைக்கும் பரவலாம்.சிறுநீர் கழிக்கும் போது வலி இருந்தால், புரோஸ்டேட் சுரப்பியில் அழற்சி உள்ளது என அரத்தம். எனவே அந்த வழியைச் சாதாரணமாக நினைக்காமல், உடனே அதற்கான சிகிக்கையைச் செய்ய முயற்சி செய்யுங்கள்.மூல நோய் இருக்கும் பகுதியில் உள்ள நரம்புகள் தடிமனாகவும், அழற்சியுடன் இருந்தால், நீங்கள் இடுப்பு வலியைச் சந்திக்க நேரலாம். இந்த மாதிரியான நரம்பு பிரச்சனை ஆசன வாயின் உள்ளேயும் அல்லது வெளியேயும் இருக்கலாம். இந்த மாதிரி இருந்தால், குடலியக்கத்தின் போது கடுமையான வலி வராகி கூடும்.