ஊரடங்கு நாளிலும் டிராபிக் ஜாம் – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

சென்னையில் உள்ள பாடி மேம்பாலத்தில் இன்று காலை டிராபிக் ஜாம் ஏற்படும் அளவுக்கு மக்கள் அதிகளவில் வெளியே செல்ல ஆரம்பித்துள்ளனர்.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் நோய் தொற்று உலக நாடுகளில் பரவி பெருவாரியான மக்கள் இனத்தை கடுமையாக பாதித்து வருகிறது. இதனால் அந்தந்த நாட்டு மக்கள் அனைவரும் இந்த நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். மேலும் அரசாங்கமும் மக்கள் அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே வரக் கூடாது என ஊரடங்கை அறிவித்துள்ளது.ஆனால் தமிழகத்தில் பல இடத்தில் மக்கள் அதை சரியாகப் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று காலை சென்னையில் உள்ள பாடி மேம்பாலத்தில் மக்கள் அதிகளவில் வாகனத்தில் வர அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமானப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *