உயிரை பணயம் வைத்து எண்ணெய் கிணற்றுக்குள் சிக்கிய நாயை காப்பாற்றிய சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்!

தன் உயிரையே பணயம் வைத்து எண்ணெய் கிணற்றில் தவறி விழுந்த நாய்க்குட்டியை 10 வயது சிறுவன் மீட்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.துருக்கியில் தியார்பகீர் (Diyarbakir) மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில், எனிஸ் டேய்லன் (Enes Taylan) என்ற 10 வயது சிறுவன், நண்பர்களுடன் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது நாய்க்குட்டியின் சத்தம் கேட்டு நின்றுள்ளான்.அப்போது, அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று சுற்றிமுற்றி பார்த்த சிறுவன், அருகில் இருந்த எண்ணெய் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்த போது, அங்கு எண்ணெயில் நாய்க்குட்டி சிக்கி தவிப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, மற்ற நண்பர்கள் உதவியுடன் அவசர குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளான். அவர்கள் வந்து நாய்க்குட்டியை மீட்பதற்காக அந்த கிணற்றுக்குள் எனிஸ் என்ற அந்த சிறுவனை தலைக்கீழாக இறக்கிவிட்டனர்.
பின்னர் சிறிதுநேரம் போராடி நாய்க்குட்டியை எண்ணெய் கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றி அருகில் இருந்த குளத்திற்கு எடுத்து சென்று நாய்க்குட்டியை சிறுவன் சுத்தப்படுத்திவிட்டு அங்கேயே விட்டுவிட்டான்.அதுவரை சிக்கித்தவித்த நாய்க்குட்டி பின்பு இயல்பு நிலைக்கு திரும்பியது. மனித நேயத்துடன் சிறுவன் செயல்பட்டு நாய்க்குட்டியை காப்பாற்றிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி உலகம் முழுவதும் விலங்கு நல ஆர்வலர்களிடம் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *