இந்தியாவில் கொரோனா வைரசால் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கர்நாடக மாநிலம் கல்புர்கியை சேர்ந்த முதியவர் இந்த நோயால் கொல்லப்பட்டதாகவும், 3 பேர் குணமடைந்துள்ளதாகவும், மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.இந்த நிலையில், பல்வேறு பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியவர்களால் இந்த நோயின் தாக்கத்தை எதிர்கொள்வது கஷ்டம் என்பதால், அவர்களுக்கு வருமுன் காப்பதே சிறந்தது.
குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க சில டிப்ஸ் இதோ:உங்கள் குழந்தையுடன் பேசுங்கள், இந்த நோய் தடுப்புக்கு, எதிரான சிறந்த ஆயுதம் விழிப்புணர்வுதான்.நல்ல சுகாதாரத்தை பராமரிப்பது மிக முக்கியம். எப்போதும் ஒரு சானிடைசரை பையில் வைத்திருக்கவும் தும்மல் அல்லது இருமல் உள்ளவரிடமிருந்து குறைந்தபட்சம் 1 மீற்றர் அல்லது 3 அடி தூரத்தில் தள்ளி இருக்க உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். இது எல்லா வகை வைரஸ் பிரச்சினைகளையும் கட்டுப்படுத்தும் பாதுகாப்பு என்பது இரு வழி செயல்முறை. குழந்தையை பாதுகாப்பாக வைத்திருப்பதோடு உங்களுடைய பொறுப்பு முடிவடையாது.கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான மற்றொரு சிறந்த வழி, உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது.குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால், பூங்கா, கேளிக்கை பகுதிகள், அம்யூஸ்மென்ட் பார்க், தியேட்டர்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களுக்கு கூட்டிச் செல்லாதீர்கள்.வயிற்றுப்போக்கு, ஃபுட் பாய்சன், வாந்தி போன்ற பல உணவு தொடர்பான நோய்களை எதிர்கொள்ளவும், கொரோனா வைரஸை எதிர்கொள்ளவும், பாதுகாப்பான முறையில், உணவு தயாரித்தல் அவசியம்.நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் உங்கள் குழந்தைகளை வைத்திருங்கள். நோய் அறிகுறி உள்ளவர்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள், உணவு மற்றும் டவல் போன்ற ஆடைகளை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
- Monday
- January 18th, 2021
- Submit Post