என்னடா கோழிக்கறிக்கு வந்த சோதனை! ஓசியில் கொடுத்தாலும் மறுக்கும் மக்கள்!

கோழிக்கறியில் கொரோனா இருப்பதாக வெளியான வதந்தியால் இலவசமாக கோழிகளை கொடுத்தும் மக்கள் வாங்காத நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் கோழிக்கறி சாப்பிடுவதால் கொரோனா வருவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலை நம்பி மக்கள் கோழி சாப்பிடுவதை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளனர்.இதனால் கிலோ 100 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகி வந்த கோழிக்கறி தற்போது 30 முதல் 40 ரூபாய்க்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விலை இவ்வளவு குறைந்தும் கூட மக்கள் கோழிக்கறி வாங்க ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவர் தன்னிடம் இருந்த 2000 கோழிகளை அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று இலவசமாக கொடுத்துள்ளார். ஆனாலும் மக்கள் அதை வாங்க முன்வரவில்லை.கடந்த சில நாட்களில் கோழிக்கறி மேல் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சத்தால் தனக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்டமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் கேரளாவிலிருந்து பறவை காய்ச்சல் பரவ தொடங்கியிருப்பதால் கோழிகள் மீதான பயம் மக்களுக்கு மேலும் அதிகரித்துள்ளது. இதனால் விற்காமல் இருக்கும் கோழிகளை உரிமையாளர்கள் குழி தோண்டி புதைத்தும், எரித்தும் அழித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *