2021 -ல் நான் தான் முதலமைச்சர் – வைகை புயல் வடிவேலு ’கலாய்’ !

சில வருடங்களாக வடிவேலி சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது, செய்தியாளர்கள் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா இல்லையா என்பது கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்து பதிலளித்த வடிவேலு,ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா இல்லையா என்பது குறித்து அவருக்கும் தெரியாது; எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது என விமர்சித்தார்.அவர், ரஜினியின் கட்சி ஒருவருக்கு ஆட்சி ஒருவருக்கு என்ற கருத்தை வரவேற்றார். மக்களுக்கு யார் செய்தாலும் அவர்களை வரவேற்கலாம். ரஜினி முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்பது நல்ல விஷயம் என்று தெரிவித்தார்.மேலும், வரும் 2021 ஆம் ஆண்டில் நான் தான் சி.எம் அதை ரொம்ப பேர் கெடுக்கப் பார்கிறார்கள் என்றும் அவர் வாங்க மோதிப் பார்க்கலாம் என்று கூறி தனது காமெடி முத்திரை முகத்தில் பாவனை காட்டியடி கலாய்த்தபடி சென்றார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *