தாயை அவதூறாக பேசிய விஷாலின் உண்மை முகத்தை கிழித்தெடுத்த மிஷ்கின்!

கோலிவுட் வட்டாரத்தில் தற்போது, நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின் விவகாரம் பெரியதாக வெடித்துள்ளது.’துப்பறிவாளன் 2′ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்துள்ளது. அதற்குப் பிறகு விஷால் – மிஷ்கின் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், இயக்குநர் மிஷ்கின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்.தற்போது இந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பை விஷாலே ஏற்றுக் கொண்டுள்ளார். அவருடைய இயக்கத்தில் உருவாகும் முதல் படமாக ‘துப்பறிவாளன் 2’ அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், விஷாலுக்கு மிஷ்கின் விதித்த 15 நிபந்தனைகள் கொண்ட கடிதமும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், ‘கண்ணாமூச்சி’ வெப்சீரிஸ் அறிமுக விழாவில் கலந்துக்கொண்ட இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் 2 சர்ச்சைக் குறித்து விஷாலை கடுமையாக தாக்கிப் பேசினார்.அதில், “என் அம்மாவை பற்றி தவறாக பேசினார் விஷால்” என கூறிய அவர், “நான் வீண் செலவு செய்ததாக விஷால் கூறுவதை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியுமா?” எனவும் கேள்வி எழுப்பினார் மிஸ்கின்.

மூன்று வருடங்களாக தம்பியாக நினைத்து பழகியதாகவும், ஆனால் விஷால் தன் தாயையே அவதூறாக பேசியதாகவும் மிஷ்கின் குறிப்பிட்டார்.”யாரும் எனக்கு படம் கொடுக்கவில்லை என்றால் என்ன, ஒரு இன்ஸ்டியூட் சென்று பாடம் நடத்துவேன். டேய் தம்பி விஷாலு.. உன் பூச்சா வேலை எல்லாம் என் கிட்ட காட்டாத. உனக்கு இருக்கு ஆப்பு. இதுதான் ஸ்டார்டிங். இனிமேல் நீ தூங்கவே மாட்டேன். உன் பக்கம் தர்மம் இருந்தால் வாடா குருக்ஷேத்திர போருக்கு.. வா போரிடலாம்” என கோபத்துடன் பேசினார் மிஸ்கின்.மேலும், தயாரிப்பாளர் யாரும் என்னை வைத்து படம் எடுக்கக் கூடாது என்று சொல்ல விஷால் யார் என்ற மிஷ்கின், தனது தம்பியை விஷால் தரப்பினர் அடித்தபோதும் கூட அது பற்றி இதுவரை தான் பொது வெளியில் பேசியதில்லை என்றும் மிஷ்கின் கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *