நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.பிகில் பட விவகாரம் தொடர்பாக கடந்த மாதம், நடிகர் விஜய் மற்றும் அன்பு செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.அதில், அன்புசெழியன் வீடு மற்றும் அலுவலகத்திலிருந்து 77கோடி ரூபாய் பணமும், 1.5கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் விஜய் வீட்டில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது.
இதையடுத்து நடிகர் விஜய் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி பைனான்சியர் அன்பு செழியனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி அவர்கள் விசாரணைக்கு ஆஜராகினர். விஜய் சார்பில் அவரது ஆடிட்டர் விசாரணைக்கு ஆஜரானார்.இதைதொடர்ந்து சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலணியில் உள்ள மாஸ்டர் படத்தின் இணைத்தயாரிப்பாளர் லலித் குமார் வீட்டில் சில நாட்களுக்கு முன் ஐ.டி.அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் 8அதிகாரிகள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- Monday
- January 18th, 2021
- Submit Post