பிரபல நடிகர் தனுஷ் தனது சகோதரியான கார்த்திகாவின் மகனுக்கு சீர் செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.தனுஷ் மற்றும் செல்வராகவனின் சகோதரியான கார்த்திகா மருத்துவராக பணியாற்றி வருகிறார்.இவரது மகனுக்கு தாய்மாமன் மடியில் அமரவைத்து மொட்டை அடிக்கும் நிகழ்வு திருப்பதி கோவிலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தனுஷ் மற்றும் செல்வராகவன் தாய்மாமன் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.தனுஷ் மடியில் அமரவைத்து மொட்டை அடித்தும், செல்வராகவன் மடியில் அமரவைத்து காது குத்தும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.இந்நிகழ்வை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ள கார்த்திகா, தனது சகோததர்களை எண்ணி பெருமைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
- Friday
- January 22nd, 2021
- Submit Post