சூரைக்காற்று சுழன்று ஒரே இடத்தில் சுற்றிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள செங்கல்சூலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட காற்று சூழல் சுமார் 2 நிமிடங்கள் வரை சுற்றியுள்ளது.இதில், சுமார் 2 நிமிடங்களுக்கு வீசிய அந்த சூழல் காற்றில் செங்கல் சூளையில் இருந்த செம்மண் காற்றில் கலந்து பெரிய சூழலாக மாறியுள்ளது.
பம்பரம் சுழல்வதுபோல் காற்று சுழன்று சுழன்று வீச அருகில் இருக்கும் பொருட்கள் காற்றில் பறக்கின்றது. இந்த காட்சியை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த காட்சியை இணையத்தில் பலரும் ஆர்வமாக பார்வையிட்டு வருகின்றனர்.
- Monday
- January 18th, 2021
- Submit Post