படப்பிடிப்பில் பறிபோன மூன்று பேரின் உயிர்கள்! அதை தொடர்ந்து கமல்ஹாசன் மேற்கொண்ட முக்கிய செயல்

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் லைகா நிறுவனத்துக்கு கமல்ஹாசன் முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டியில் கடந்த புதன்கிழமை இரவு நடந்தது.அப்போது கிரேன் இயந்திரம் சரிந்து, உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.இந்த விவகாரத்தில் மூவர் இறப்பதற்கு முக்கிய காரணம் என கூறப்பட்ட கிரேன் ஆப்ரேட்டர் ராஜனை பொலிசார் கைது செய்த நிலையில் பின்னர் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு கமல்ஹாசன் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.அதில், இந்தியன் 2 படப்பிடிப்பில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.இது போன்ற விபத்து நேரிட்டால் சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனவே பொறுப்பேற்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு பணம் மட்டுமே போதாது, பாதுகாப்பு சம்மந்தமான விடயங்கள் உறுதிசெய்யப்பட்டால் தான் இனி நிம்மதியாக அவர்கள் பணிபுரிய முடியும்.தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களின் செலவுகளை தயாரிப்பு நிறுவனம் தான் கவனித்து கொள்ள வேண்டும் என எழுதியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *