சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு.. விலக்கு விலக்கு வெட்கம் வந்தால் விலக்கு விலக்கு’…என்ற பாடலுக்கு இருபெண் பொலீசார் கடற்கரையில் நடனம் ஆடும் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.சமீப காலமாகவே டிக்-டாக் என்னும் ஆப் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. பெண்கள் உட்பட எல்லா இளைஞர்களும் அதிகமாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.கலைத்தாகம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் ஆடுகிறார்கள். பாடுகிறார்கள் என்பதால், இதனுடைய பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகின்றது. ஒரு சில நேரங்களில் இதே டிக்டாக் வீடியோ ஆப்பினால் விபரீதங்களும் நிகழ்ந்து வருவதையும் ஏற்று கொள்ள வேண்டி உள்ளது.இப்போது ஒருவீடியோ வைரலாகிறது. இரு இளம் பெண் பொலீஸார் டான்ஸ் ஆடுகிறார்கள். கடலூர் பீச்சில் ‘சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு..’ என்ற பாடலுக்கு இரு பெண்களும் டூயட் ஆடுகிறார்கள். பின்னால் அந்த பாடல் ஒலிப்பதை தெளிவாகவும் கேட்க முடிகின்றது. பீச் என்பதால் காலில் ஷூ இல்லை, ஆனால் கொலுசு அணிந்துள்ளனர்.
கடமைக்குப் போன இடத்தில் இப்படி ஆடினார்களா அல்லது கடமையை முடித்துவிட்டு நடனம் ஆடினார்களா என்று தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோவை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க தேவையில்லை என்றே தோன்றுகிறது.உரிய விடுமுறை கிடைக்காமல் நிறைய மன உளைச்சலில் தற்போது எண்ணற்ற பொலீசார் பணியாற்றி வருகிறார்கள். பலரை அது தற்கொலை வரை சென்று விட்டுவிடுகிறது. தமிழக அரசும் பொலீசாரின் மன அழுத்தத்தைப் போக்க யோகா பயிற்சியையும் ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில், தங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட தாங்களே இதுபோன்றதொரு யுக்தியை கையாளுவது சிறப்பு வாய்ந்ததே.
கலையை ரசிக்க எந்த தடையும் யாருக்கும் எப்போதும் கிடையாது.அதே சமயத்தில் மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் எண்ணற்ற
பொலீசார்களுக்கு, இது போன்ற டிக்-டாக் வீடியோக்கள் புதிய உத்வேகத்தைதான் தருவதாகவே இருக்கும்! இருந்தாலும், இந்த பெண்கள் காக்கிச் சட்டையை, அணிந்து கொண்டு நடனம் ஆடுவதுதான் கொஞ்சம் இடிக்கின்றது.
- Monday
- March 8th, 2021
- Submit Post