ஓட்டுனர் இல்லாமல் தானாகவே 110 கி,மீ வேகத்தில் ஓடிய ரயில் – பின் நடந்த கோர சம்பவம்? வீடியோ உள்ளே!!

அஸ்திரேலியாவில் ஓட்டுநரில்லாமல் வேகமாக சென்ற சரக்கு ரயில் ஒன்று தடம்புரளச் செய்யப்பட்டு நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 கிலோமீட்டர் நீளமுள்ள ரயிலின் ஒரு பெட்டியைச் சோதனை செய்ய ஓட்டுநர் வண்டியிலிருந்து இறங்கியபோது அவரில்லாமலேயே ரயில் நகரத் தொடங்கியிருக்கிறது. ஓட்டுநரில்லாமல் ரயில் எப்படி நகர்ந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.அந்தச் சரக்கு ரயிலில் 268 பெட்டிகளைக் கொண்டுள்ளது. மேலும் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சுமார் 1 மணி நேரம் ஓட்டுநரில்லாமல் பயணித்துள்ளது. அந்த ரயில் தடம் புரண்டதில் சுமார் 1,500 மீட்டர் ரயில் தண்டவாளம் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.அந்த ரயில் சுரங்க நிறுவனமான BHPக்குச் சொந்தமானதென தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் அதிஷ்டவசமாக ஒருவக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.

ஓட்டுநரில்லா ரயிலால் விபத்து நேரக்கூடுமென அஞ்சிய நிறுவனம், வேண்டுமென்றே ரயில் தண்டவாளத்தில் மாற்றம் செய்து ரயிலைத் தடம் புரளச் செய்தது. எப்படி தானகவே ரயில் நகர்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக BHP தெரிவித்துள்ளது. அந்தச் சரக்கு ரயிலில் இரும்புத் தாது ஏற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *