கணிப்பானை விட வேகமாக கணித்து உலக சாதனை படைக்கும் இந்திய வம்சாவளித் தமிழன்….!!

உலகிற்கே இன்று பூஜ்ஜியத்தை கொடுத்த கொடுத்தவர் ராமானுஜர் இவரை நாம் கணித மேதை என்று புகழ்கின்றோம். இவர் வாழ்ந்த மண்ணில் பிறந்த நமக்கும் அவரின் அறிவும், சிந்தனையும் ஜீனில் சாதாரணமாகவே கலந்திருக்கும்.கல்குலேட்டரை விட அதிகவேகத்தில் கணித்து கூட்டல், பெருக்கல், வகுத்தல், வர்க்க மூலம் காணுதல் என்றால் நம்மால் முடியாது. நாம் இன்று டிஜிட்டல் உலகில் இருப்பதால், நாம் பெரும்பாலும் கல்குலேட்டர், கணிணி உதவியோடு தான் ஓரே நேரத்தில் இதுபோன்ற வேலையை செய்ய இயலும்.கல்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் மனிதனை நாம் இந்த காலத்தில் பார்த்திருக்க முடியாது. ஆனால் ,கல்குலேட்டர் இல்லாமல் ஒரு மனிதனால் கூட்டல், கழித்தல், பெருக்கல், வர்க்க மூலம் காணுதல் என்பது சாத்தியமாக என்றால் சாத்தியம் தான் என்று நிருபித்துள்ளார் இவர். இவர் ஏசியன் சாம்பியன்ஷிப்பில் கல்குலேட்டரையும் மிஞ்சிய வேகத்தில் கணித்துள்ளார் என்றால் நம்மால் நம்ம முடியுமா? இவர் மலேசியாவில் பிறந்தாலும், இவரின் பூர்வீகம் இந்தியா தான். இவர் தமிழரா என்று அனைவருக்கும் ஒரு பரபரப்பு ஏற்பட்டிருக்கும். இவரே இவருக்கு ஹீயூமன் கல்குலேட்டர் என்று பெயரையும் வைத்துள்ளார்.யாஷ்வின் சரவணன்:இவரை மனித கல்குலேட்டர் அன்று அழைக்கப்படுகின்றார். வேகமான மனக் கணக்கீடுகளுக்கு அவர் மிகவும் பிரபலமானவர். 15வயதான இவர். சாதனையின் உச்சம் என்றே கூறாலம். கணித்தில் தனது அற்புத திறமையால், உலக மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்தியுள்ளார். ஆசியா காட் டேலண்ட் 2019ல் மேடையில் இவர் நிழத்தியது சாதனையாகவும் பார்க்கப்படுகின்றது.மலேசியாவில் இருந்து சென்று ரன்னர் பட்டத்தையும் வென்றுள்ளார்.சுய விபரம்:இயற்பெயர் : யாஷ்வின் சரவணன்.புனைப்பெயர் : ஹியூமன் கால்குலேட்டர். பிரபலம் : அதிவேக மனக் கணக்கீடு.யாஷ்வின் சரவணன் பூர்வீகம்: யாஷ்வின் சரவணன் பூர்வீகம் கேரள மாநிலம். இவர் இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தில் பிறந்தவர். பிறகு, அவரது குடும்பம் மலேசியாவின் கோலாலம்பூருக்கு குடிபெயர்ந்தது. அவரது வயது 15 வயது (20.1.90ன்படி சுட்டிக் காட்டுப்பட்டுள்ளது).யாஷ்வின் சரவணன் குடும்பம்: யாஷ்வின் சரவணன் குடும்பம் கேரளாவை சேர்ந்தாகவும் இருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் மலேசியாவில் தமிழர்களை போலவே வாழ்ந்து வருகின்றனர்.யாஷ்வின் சரவணனின் குடும்பத்தினர் பெயர்கள் எதுவும் தெரியவில்லை. தந்தை, தாய், சகோதாரர் என்று அவர்கள் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். மேலே இருப்பது தான் குடும்ப புகைப்படம்.7 வயதிலேயே வேகக் கணக்கீட்டைக் கற்கத் தொடங்கினார் யாஷ்வின் சரவணன். பல வருட கடின நடைமுறைகளுக்குப் பிறகு, அவருக்கு மனித கல்குலேட்டர் என்ற பட்டம் கிடைத்தது.யாஷ்வின் கடந்த காலங்களில் பல பரிசுகளையும் கோப்பைகளையும் வென்றுள்ளார்.இரவில் தூங்காத யாஷ்வின்:கணிதத்தில் யாஷ்வின் ஆர்வம் தனது 7 வயதில் வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கியதும், கணிதத்தைக் கற்க அபாகஸைப் பயன்படுத்தத் தொடங்கினார்.இறுதியில், அவர் அனைத்து நிலைகளையும் முடித்தபோது, ​​வகுப்புகள் பயனற்றதாகக் கண்டார். யாஷ்வின் தனது சொந்த பயிற்சியைத் தொடங்கிய நேரம் அது. யாஷ்வின் ஒரு நேர்காணலில் நான் எண்களை மிகவும் விரும்புகிறேன். எல்லா இடங்களிலும் ஒருவித தொடர்பைக் காண்கிறேன். நான் கார் எண் தகடுகளைப் பார்த்தாலும் கூட, சில நேரங்களில் என்னால் இரவில் தூங்க முடியாது என்று தெரிவித்தார்.மிகவும் பிரபலமான யாஷ்வின் : யாஷ்வின் சரவணன் தான் வேகக் கணக்கீட்டு திறனுடன் பிறக்கவில்லை என்று நம்புகிறார். ஆனால் அவர் தன் சொந்த முயற்சியால், 100% வெற்றியடைந்துள்ளார்.அவர் பரிசளிக்கப்பட்டவர் என்று மறுத்த போதிலும், யாஷ்வின் ஒவ்வொரு நாளும் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே மன எண்கணிதத்தை பயிற்சி செய்கிறார். சில சமயங்களில் அவர் பயிற்சி கூட செய்ய மாட்டார்.இப்போதைக்கு, யாஷ்வின் மலேசியாவில் மட்டுமல்ல, ஆசியாவிலும் மிகவும் பிரபலமாகிவிட்டார். மேலும் அவரது வேக கணக்கீட்டு வீடியோ 1.5 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *