விஜய்யின் 64வது படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடந்து வருகிறது.விஜய் தங்களது மாநிலத்திற்கு வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் அவரது ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக ஹோட்டல் முன்பு ஆஜராகி வருகின்றனர்.தினமும் அந்த வீடியோக்களை நாம் பார்த்து தான் வருகிறோம். இப்போது இந்த கர்நாடகா படப்பிடிப்பில் இன்னொரு நடிகர் இணைய இருக்கிறார் என்பது தெரிகிறது.
நடிகர் ஷாந்தனு விமானத்தில் இருப்பது போல் புகைப்படம் வெளியிட்டு அதில் ஷிவமூகா என்று பதிவிட்டு இப்போதைக்கு இவ்வளவு தான் என பதிவு செய்துள்ளார்.இதில் இருந்து தெரிகிறது, அவரும் கர்நாடகாவில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என்பது.
Shivamogga ……..
Ippodhiku ivlo dhan update 😅😜 pic.twitter.com/X3k0FjGV1R
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) December 18, 2019