வீதியில் பிச்சையெடுத்த குடும்பத்தை தனது வீட்டிற்கு அழைத்து பேருதவி புரிந்த பிரபல நடிகர்..!

தன்னைத் தேடிவந்த குடும்பமொன்று சென்னையில் கஷ்டப்படுவதை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் அழைத்து மருத்துவ உதவிகள் செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.ராஜபாளையத்தை சேர்ந்தவர் குருலெட்சுமி, இவரது தம்பி வெங்கடேசன், இவரது ஒரே மகன் சூர்யா.மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த குருலெட்சுமிக்கு அவரது தந்தை மிகவும் கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்துள்ளார்.ஒரு வருடத்தில் மகன் சூர்யா பிறந்ததும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்த குடும்பத்தின் சந்தோஷம் நீடிக்கவில்லை.விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்ட சூர்யாவால் நடக்க முடியாமல் போனது. சில வருடங்களில் பேசவும் முடியாமல் போனதுடன் இதயம் படபடவென அடிக்கத் தொடங்கியது.மருத்துவமனை ஏறி இறங்கியும் நோய் குணமாகாத நிலையில், கணவரும் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர குடும்பமே நொறுங்கி போனதாம்.சூர்யாவின் நிலையை கண்டு கதறிய வெங்கடேசன், தனது திருமணத்தை தள்ளி போட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸை பார்த்தால் உதவி கிடைக்கும் என நம்பி சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.இங்கு வந்தும் லாரன்ஸின் முகவரியை கண்டுபிடிக்க முடியாததால் ரயில்வே பிளாட்பாரத்தில் வசித்து வந்தனர்.இத்தகவல் வைரலாக அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து வர சொல்லியுள்ளார் லாரன்ஸ், இதன்படி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள லாரன்சின் வீட்டிற்கு சென்றதுடன் அவரை நேரில் பார்த்து கண்ணீர் வடித்துள்ளனர்.இதுகுறித்து பேசிய லாரன்ஸ், என்னை நம்பி வந்த மூவரும் கஷ்டப்படுவது அறிந்து வேதனை அடைந்தேன்.வினோத நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஏற்றவாறு உதவிகள் செய்யப்படும். என்னால் இயலாத பட்சத்தில், அறக்கட்டளை மூலமாகவோ அல்லது அரசிடம் உதவி கேட்கப்படும் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *