பலருக்கும் தெரியாத பழஞ்சோற்றின் மகத்துவம்….தமிழர் பண்பாட்டோடு ஒன்றிணைந்த பழஞ்சோறு..

தமிழரின் வாழ்வியலில் பழஞ்சோறு என்பது மிக முக்கியமான உணவாகும். முதல் நாள் சமைத்த சோற்றில் தண்ணீர் ஊற்றி மறுநாள் உண்ணும் உணவாகும். சோறு வீணாவதைத் தடுக்க இவ்வாறு செய்கின்றார்கள்.நொதித்த உணவு வகைகளுள் ஒன்றான இது பொதுவாக, உழவர்கள், பாட்டாளிகள், அடித்தட்டு மக்களின் உணவாகவும் உள்ளது.பழஞ்சோறு அல்லது பழைய சோறு என்பது முந்தைய நாள் வடித்த சோற்றில் தண்ணீர் ஊற்றி மறுநாள் உண்ணும் உணவாகும். சோறு வீணாவதைத் தடுக்க இவ்வாறு செய்கின்றார்கள். நொதித்த உணவு வகைகளுள் ஒன்றான இது பொதுவாக, உழவர்கள், பாட்டாளிகள், அடித்தட்டு மக்களின் உணவாகவும் உள்ளது. இதனால், சமூகத் தகுதியில் உயர்ந்தவர்களும், பணக்காரர்களும், நகரங்களில் வாழ்வோரும் பழஞ்சோற்றைத் தாழ்வாகப் பார்க்கும் நிலை உள்ளது.நொதிக்கவைத்தல், உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கும் அவற்றைக் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்குமான மிகப் பழைய முறைகளுள் ஒன்று. பழஞ்சோறு மனிதருடைய உடலின் செயற்பாட்டுக்குத் தேவையான பல கனிமப் பொருட்களை அதிக அளவில் கொண்ட காலை உணவாகப் பயன்படலாம் என்பதைப் பல ஆய்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன.பழஞ்சோற்றில், சோடியம், பொட்டாசியம், கல்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற தனிமங்களைக் கொண்ட கனிமப்பொருட்கள் அடங்கியுள்ளன. அத்துடன், மனிதரின் தைராயிட் சுரப்புநீரைக் கட்டுப்படுத்துவதன் மூலம், வளர்ச்சிக்கும், வளர்சிதைமாற்றத்துக்கும் உதவும் செலெனியம் என்னும் தனிமமும் சிறிய அளவில் பழஞ்சோற்றில் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.இதனால், சமூகத் தகுதியில் உயர்ந்தவர்களும், பணக்காரர்களும், நகரங்களில் வாழ்வோரும் பழஞ்சோற்றைத் தாழ்வாகப் பார்க்கும் நிலை உள்ளது. நொதிக்கவைத்தல், உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கும் அவற்றைக் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்குமான மிகப் பழைய முறைகளுள் ஒன்றாகும்.இன்றைய தலைமுறையினருக்கு பழஞ்சோறு என்பது தெரியாமலே போய்விட்ட உணவாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *