இவற்றை வியாழக்கிழமைகளில் சாய் பாபாவிற்குப் படைத்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது தெரியுமா?

சாய் பாபாவிற்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இவ்வளவு பக்தர்கள் இருப்பதற்கு காரணம், சாய் பாபா பக்தர்களின் ஆசையை நிறைவேற்றுவது தான். அதிலும் வியாழக்கிழமைகளில் சாய் பாபாவிற்கு பிடித்ததைப் படைத்து வேண்டினால், நினைத்த காரியம் மிக விரைவில் நடக்கும் என மக்கள் நம்புகின்றனர். ஏனெனில் வியாழக்கிழமை சாய் பாபாவிற்கு உரியது.

வியாழக்கிழமைகளில் பக்தியுடன் சாய் பாபாவை வணங்கும் பக்தர்கள், தங்கள் வாழ்வில் எவ்வித பிரச்சனைகளையும் சந்திக்கமாட்டார்கள். சரி, சாய் பாபாவிற்கு என்னவெல்லாம் பிடிக்கும், எதைப் படைத்தால் சாய் பாபா நினைத்த காரியத்தை வேகமாக நிறைவேற்றுவார் என்பது குறித்து காண்போம்.

பசலைக்கீரை
சாய் பாபாவிற்கு பிடித்த காய்கறி பசலைக்கீரை என நம்பப்படுகிறது. அதனால் தான் நிறைய பேர் வியாழக்கிழமைகளில் சாய் பாபாவிற்கு பசலைக்கீரையைப் படைத்து வணங்குகிறார்கள்.

அல்வா
எப்படி விநாயகருக்கு லட்டு பிடிக்குமோ, அப்படி தான் சாய் பாபாவிற்கு அல்வா பிடிக்கும். எனவே ரவையால் ஆன அல்வாவை வியாழக்கிழமைகளில் சாய் பாபாவிற்கு படைத்து பயன் பெறுங்கள்.

கூழ்
சாய் பாபாவின் விருப்பமான உணவு கஞ்சி/கூழ் ஆகும். இந்த கஞ்சி/கூழை வியாழக்கிழமைகளில் தயாரித்து சாய் பாபாவிற்குப் படைத்தால், நினைத்த காரியம் விரைவில் கைக்கூடும்.

தேங்காய்
அனைத்து மத செயல்பாடுகளிலும் தேங்காய் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சாய் பாபாவிற்கும் இது மிகவும் பிடித்த பொருளாகும்.

பூக்கள்
அனைத்து கடவுள்களையும் போல், சாய் பாபாவிற்கும் பூக்கள் மற்றும் மாலைகள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக மஞ்சள் நிற மலர்களான சாமந்தி அல்லது சூரியகாந்தி என்றால் சாய் பாபாவிற்கு ரொம்ப பிடிக்கும்.

பழங்கள்
பழங்களில் ஆரஞ்சு பழம் சாய் பாபாவிற்கு பிடிக்கும் என்பதால், வியாழக்கிழமைகளில் ஆரஞ்சு பழத்தை சாய் பாபாவிற்கு படைத்து, நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *