சுண்டுவிரலில் வெள்ளி மோதிரம்… படிச்சு பாருங்க இனி கட்டாயம் போடுவீங்க!

வேத ஜோதிட கருத்துப்படி வெள்ளி என்பது வியாழன் கோளையும், சந்திரன் போன்றவற்றை குறிக்கிறது. நமது உடலில் உள்ள ஐம்பெரும் பூதங்களான நீர், கபம் இரண்டையும் சமநிலைபடுத்துகிறது. வேத சாஸ்திரங்களை எடுத்துக் கொண்டால் வெள்ளி உலோகம் அணிந்திருப்பவர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம், அழகு, செல்வம் மற்றும் சந்தோஷம் சந்தோஷம் என்று எல்லாம் கை கூடி வரும் என்று சொல்லுகிறது.

வேத ஜோதிடப்படி நீங்கள் வியாழன் மற்றும் சந்திர கோள்களின் முழுப்பயனையும் பெற விரும்பினால் அதற்கு வெள்ளி உலோகம் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. மேலும் இதை நமது உடலில் அணியும் போது நமது உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

வாழ்க்கையில் உதிக்கும் நேர்மறை எண்ணங்கள்
வீட்டில் நிறைய வழிகளில் வெள்ளி பொருட்களால் அலங்கரிக்கும் போது நமது வீட்டில் நேர்மறை எண்ணங்கள் உதயமாகின்றன. வெள்ளி அணிகலன்கள், வெள்ளி பாத்திரங்கள், வெள்ளி அழகு பொருட்கள் என்று வைக்கும் போது நமது உள்ளத்திலும் வாழ்க்கையிலும் நேர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன.

குழப்பங்கள் விலகும் :
நீங்கள் சமாளிக்க முடியாத நோயுடனோ அல்லது மனக் குழப்பங்கள், பிரச்சினைகள் இவற்றுடன் காணப்பட்டால் அந்த சமயங்களில் இந்த வெள்ளி உலோகம் உங்கள் மனதில் ஒரு நிம்மதியையும் அமைதியான அலைகளையும் இட்டுச் செல்கிறது. உங்கள் சுண்டு விரலில் அணிந்திருக்கும் வெள்ளி மோதிரத்தை ஒரு தண்ணீர் பெளலில் வைத்து பார்த்தால் அது ஆற்றலை கிரகிக்கும் சக்தியுடன் காணப்படுவது தெரியும்.

வெள்ளி மோதிரத்தை கொண்டு ஆற்றலை சுத்தம் செய்யும் முறை:
இதற்கு 3 முறைகள் செய்யப்படுகின்றன. முதலில் ஆன்லைனில் அல்லது மார்க்கெட்டில் வெள்ளி மோதிரம் வாங்கி கொள்ளுங்கள். ஒரு வியாழக்கிழமை அன்று இரவு முழுவதும் தண்ணீரில் வெள்ளி மோதிரத்தை வைத்து விடுங்கள்.

இது ஆற்றலை சுத்தம் செய்ய செய்யப்படுகிறது. இப்பொழுது இந்த மோதிரத்தை நீங்கள் கும்பிடும் பூஜை அறையில் வைத்து மனசார கடவுளிடம் பிராத்திக்க வேண்டும். இப்பொழுது இந்த மோதிரம் உங்களுக்கு நிறைய பலன்களை கொடுக்க கூடியதாக அமையும்.

ஆச்சரியமான பலன் :
கடைசியாக இந்த மோதிரத்தை சந்தன கட்டையில் வைத்து முன்னாடி உள்ள ஆற்றல்களை எல்லாம் தூய்மை செய்து உங்கள் அழகான சுண்டு விரலில் அணிந்து கொள்ளுங்கள். இதற்கு அப்புறம் உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்கள் மற்றும் நீங்கள் செய்யும் செயல்களை கவனித்து பாருங்கள் கண்டிப்பாக ஆச்சர்யமான பலன்கள் கிடைக்கும்.

பலன்கள்
வெள்ளி மோதிரத்தை அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்த்தால் இது உங்கள் அழகை அதிகரிக்கும், உங்களது ஆளுமை திறனை வியாழன் மற்றும் சந்திரன் கோள்களோடு இணைக்கும், உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி உங்களை எப்பவும் கூலாக சந்தோஷமாக வைத்திருக்கும்.

மூட்டு பாதிப்புகள் :
உங்கள் ஜாதகத்தில் சந்திரன் வலுவிழந்து காணப்பட்டால் உங்கள் அறிவுப்பூர்வமான எண்ணங்கள் பலவீனமடைந்து மற்றும் நோய்கள் காணப்படும்.ஆனால் இந்த வெள்ளி மோதிரம் சந்திரன் பார்வைக்கு வலுக்கொடுத்து பலம் தந்து உங்கள் இருமல், சளி, மூட்டு வலிகள் மற்ற எல்லா மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இவற்றையெல்லாம் சரியாக்கும்.

வெள்ளி செயின்
நீங்கள் மோதிரமாக அணிய விருப்பம் இல்லையென்றால் வெள்ளி செயினாக அணிந்து கொள்ளலாம். இதுவும் வெள்ளி மோதிரத்தை போன்ற எல்லா நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கும். நீங்கள் இதை செயினாக அணிவதால் உங்கள் தொண்டை சக்கரத்திற்கு வலுக்கொடுத்து தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குரல் பிரச்சினைகள் போன்றவற்றை சரிசெய்யும்.

வெள்ளி பொருட்கள்
வெள்ளி மோதிரம் மற்றும் செயின்களை போல வெள்ளி ஸ்பூன், கரண்டி போன்றவைகளும் முக்கியமானவை. வெள்ளி பெளலில் தேன் இட்டு அதை வெள்ளி ஸ்பூனால் பருகினால் சலதோஷம், சைனஸ் போன்ற பிரச்சினைகள் சரியாகும்.

நோய் எதிர்ப்பு செல்கள் :
வெள்ளி நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் காக்கிறது. எனவே நோய்கள் நடமாடும் இந்த நவீன உலகத்தில் இந்த வெள்ளி உலோகம் மிகவும் இன்றியமையாதது ஆகும். இதனால் ஆரோக்கியமான வாழ்வு பெற்று வாழவும் முடியும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *