ஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க..!

பொதுவாக நமது முன்னோர்களால் ஆன்மீக நெறிமுறைகள் படி நாம் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை என்று பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாம் அனைவரையும் தெரியமால் கூட சில தவறுகளை நமது வீட்டில், ஆலயங்களில் செய்யக்ககூடாது. மீறி செய்துவிட்டால் தீமை வந்து சேர்ந்து விடும் என்று கூறப்படுகின்றது. தற்போது அதில் சிலவற்றை இங்கு பார்பபோம்.

பொதுவாக, நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம், தற்போது பலரிடம் இல்லையென்றாலும், அதிலுள்ள பயன்கள் மிகுதியானவை. ஆண்கள், புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களிலும் பெண்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களிலும் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளிப்பது நல்லது.
செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது. மற்ற நாட்களில் நகம் வெட்டினாலும், வெட்டிய நகத்துணுக்குகளை வீட்டுக்குள் போடக்கூடாது. தலை வாரும்போது உதிரும் தலைமுடிகளை பேப்பரில் மடித்து குப்பையில் போட வேண்டும்.
இரவில் துணி துவைப்பது, மரத்தின் அடியில் படுத்து உறங்குவது போன்ற காரியங்களைச் செய்யக்கூடாது. இரவு உணவில், கீரை, தயிர் போன்றவற்றைச் சேர்க்கக்கூடாது.
இரவில் விளக்கு வைத்த பிறகு, பெண்கள் தலை வாருவது, பேன் பார்ப்பது, காய்கறிகளை நறுக்குவது, குப்பைகளைப் பெருக்கி வெளியில் கொட்டுவது கூடாது.
ஆண்கள் விளக்கை ஏற்றவும் கூடாது, விளக்கை அணைக்கவும் கூடாது. ஆலயங்களில் ஆண்கள் விளக்கேற்றலாம். பெண்கள், தேங்காய், பூசணி முதலியவற்றை திருஷ்டி பரிகாரமாகத் தெருவில் உடைக்கக் கூடாது.
மனைவி கருவுற்றிருக்கும்போது, கணவன் புதுமனை புகுதல், பழைய வீட்டை இடித்தல், பிரேதத்தைச் சுமந்துசெல்லுதல் கூடாது.
எலுமிச்சை விளக்குகளை வீட்டில் ஏற்றக்கூடாது. சனீஸ்வர பகவானுக்கு எள் விளக்கை வீட்டில் ஏற்றக்கூடாது.
காலையில் தூங்கி எழுந்ததும் கோயில், கோபுரங்கள், சுவாமிப் படங்கள், கடல், சூரியன், விளக்கு, தங்கம், வலது உள்ளங்கை ஆகியவற்றைப் பார்ப்பது நல்லது. கழுதை, எருமை, துடைப்பம் போன்றவற்றைப் பார்க்கக்கூடாது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *