நரகத்திற்கு போக ஆசையா? அப்போ உடனே இந்த 14 பாவங்களையும் செய்திடுங்க!!

அந்நியன் எனும் படம் வரும் வரையில் நம்மில் பலருக்கு கருட புராணம் என்றால் என்ன என்பது பற்றி தெரியாது. நாம் செய்யும் செயல்கள் தான் கர்மா. அதில் நல்லது, கெட்டது கூட்டிக்கழித்துப் பார்த்து நமது விதி, அடுத்த ஜென்மம் போன்றவை கணக்கிடப் படுவதாக கூறப்படுகிறது.

ஒருவர் செய்யும் கர்மாவின் ரிசல்ட்டான விதி தான், அடுத்த பிறவி, சொர்க்கம், நரகம் போன்றவை. இதில், என்னென்ன செயல்களில் ஈடுபட்டால் ஒருவர் நேரடியாக நரகத்திற்கு அனுப்பப்படுவார் என கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளதை பற்றி இனி காண்போம்…

செயல் #1
பிராமணர்கள் (கடவுளுக்கு பணிவிடை செய்பவர்கள் என்பதால்) பசுக்கள், கருவில் இருக்கும் குழந்தை கொலை செய்தல்.

செயல் #2
பெண்களை கொலை செய்தல், பாலியல் வன்முறைக்கு ஈட்படுத்துதல். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தீய தாக்கத்தை ஏற்படுத்துதல்.

செயல் #3
ஒருவரது நம்பிக்கையை ஏமாற்றுதல். விஷத்தன்மையான பொருட்களை பயன்படுத்துதல்.

செயல் #4
யாத்திரைக்கு செல்லும் வழியில் நல்ல மக்களை துன்புறுத்துதல், கேவலப்படுத்துதல், ஒரு கலாச்சார புராணங்கள், வேதங்கள் போன்றவற்றை கொச்சைப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ளுதல்.

செயல் #5
ஒருவருக்கு இணையில்லாத அல்லது வலிமை அற்றவர்களை துன்புறுத்துதல் நேரடியாக ஒருவரை நரகத்திற்கு கொண்டு செல்லும்.

செயல் #6
வேண்டுமென்றே ஒருவருக்கு நல்ல உணவு மற்றும் நீரை வழங்க மறுப்பது. வீட்டுக்கு வந்தவர்களை வாசலிலேயே வைத்து அனுப்புவது.

செயல் #7
மற்றவர்களிடம் இருந்து பொருட்களை, வாழ்க்கையை, வெற்றியை பறிப்பது.

செயல் #8
கடவுளுக்கு பணிவிடை செய்பவராக இருப்பினும், மற்றவர்களின் துணை மீது ஆசைப்படுவது.

செயல் #9
தங்கள் சுய லாபத்திற்காக விலங்குகளை கொல்வது!

செயல் #10
அரசன்,சான்றோர் மக்கள் துணை மீது ஆசைப்படுவது, பெண்ணை இசைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள நினைப்பது. ஒரு பெண்ணின் விருப்பம் இன்றி அவரை தீண்டுதல். தவறு செய்யாத பெண் மீது அவதூறு கூறுவது.

செயல் #11
பொய் சாட்சியம் கூறுவது, ஒன்றும் அறியாத நபர்களிடம் தீய வகையில் நடந்துக் கொள்வது, உண்மையை விலை பேசுவது.

செயல் #12
மரங்களை வெட்டுவது, விவசாய நிலங்களை அழிப்பது, காடுகளை சூறையாடுவது.

செயல் #13
மரங்களை வெட்டுவது, விவசாய நிலங்களை அழிப்பது, காடுகளை சூறையாடுவது.

செயல் #14
மனைவி, பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் இருப்பது. பெற்றோர்களை நிர்கதியாய் விடுவது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *