பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க..!

ஆண்கள் தங்களை அழகாகக் கட்டிக்கொள்ள மிக முக்கியமான விஷயம் ஒன்று உடை மற்றொன்று ஹேர் ஸ்டைல் தான். ஆனால் முடி வெட்டக் கடைக்குச் சென்ற பின்பு கடைக்காரர் மண்டையை ஒரு வழி பண்ணி அனுப்பி விட்டுவிடுவார் அதிலும் ஏதேனும் விசேஷ நாட்கள் அல்லது முக்கியமான நாட்களில் சொல்லவே தேவையில்லை பிடிக்காத ஒரு ஹேர் கட் பண்ணி அனுப்பிவிடுவார்.

மோசமான ஹேர்கட் பசங்களோடு அழகையே கெடுத்திடும். ஒரு முறை தவறான ஹேர் கட் செய்துவிட்டால் அதை ஒரு மாதத்திற்கு மாற்றவே முடியாது. அப்படி மாற்றனும்னு நினைச்சாலும் ஒரு மாதம் கழித்து முடி வளர்ந்த பின்பு தான் மாற்ற முடியும். எனவே நீங்கள் முடி வெட்டச் செல்லும் போது கடைக்காரரிடம் உங்களுக்கு வேண்டியவற்றைச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

தேர்ந்து எடுத்தல்
நாம் பல நபர்களின் ஹேர்ஸ்டைல் அழகாக இருப்பதைப் பார்த்து இருப்போம் அவற்றில் எது உங்களை மிகவும் கவர்ந்த ஒன்றோ அவை அனைத்தையும் சேகரித்து வையுங்கள். அதில் உங்களுக்கு எந்த மாதிரி ஹேர் ஸ்டைல் வேண்டும் என்பதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதாவது உங்களுக்கு எந்த ஹேர் ஸ்டைல் வேண்டுமோ அந்த படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த படம் ஒரு நடிகராகவோ அல்லது மாடலாகவோ அல்லது உங்கள் நண்பரின் புகைப்படமோ, அவர்களின் ஹேர் ஸ்டைலை கடைக்காரரிடம் காட்டுவதற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

சொல்லுங்கள்
கடைக்காரரிடம் புகைப்படத்தைக் காட்டி விட்டோம் அவர் பார்த்துக் கொள்ளுவார் என்று விட்டு விடாதீர்கள். புகைப்படத்தைக் காட்டிய பின்பு நீங்கள் கண்டிப்பாக அவருக்குப் புரிய வைக்க வேண்டும். ஏனெனில் ஓவ்வருவருடைய முக அமைப்பு, தலை அமைப்பு மற்றும் தலைமுடியும் மாறுபடும். அதற்கு ஏற்ப அவர் கட் செய்ய வேண்டும். உங்களுக்கு எவ்வளவு நீளத்தில் முடி வேண்டும் எந்த இடத்தில் உயர்த்த வேண்டும் எந்த இடத்தில் குறைக்க வேண்டும் என்பதை எல்லாம் நீங்கள் கடைக்காரருக்குத் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும்.

உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
நீங்கள் கடைக்காரரிடம் பேசும்போது அவர் உங்களுக்குப் பதிலளிக்கும் விதத்திலேயே தெரிந்து விடும். அவர் உங்கள் முடியை நன்றாகக் கட் செய்து விடுவாரா இல்லையா என்பது எனவே அவர் உங்களிடம் பேசும் போது நன்றாகப் புரியும்படி சொல்லுங்கள்.

நியூ ஐடியா
நீங்கள் நினைப்பது போல எல்லா முகங்களுக்கும் ஒரே விதமான ஹேர் ஸ்டைல் சரியாகப் பொருந்தாது. ஒரு வேலை நீங்கள் சொல்லி முடித்த பிறகு கடைக்காரர் உங்கள் முகத்திற்கு இந்த ஹேர் ஸ்டைல் பொருந்தாது என்று கூறினால் நீங்கள் தேர்வு செய்த ஹேர் ஸ்டைலில் ஏதேனும் சிறிய மாற்றங்களைச் செய்யலாமா என்று கேட்டுக் கொள்ளுங்கள். அப்படியும் முடியாது என்று கூறிவிட்டால் அதனைப் புரிந்து கொண்டு மற்றொன்றுக்கு நீங்கள் மாறித்தான் ஆக வேண்டும். பொருந்தாத ஒரு ஹேர் ஸ்டைல் உங்கள் முகத்திற்கு எப்போதும் அழகைத் தராது. எனவே உங்கள் முகத்திற்குச் சரியான ஒன்றை தேர்வு செய்வதே சிறந்தது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *