நான்கு நாட்கள் கடந்தும் இன்னமும் விடை கிடைக்காத புதிர்..! விக்ரம் லேண்டரில் தொடரும் மர்மம்..!!

டெல்லி: சந்திரயான் 2ல் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது ஏன், எப்படி நிகழ்ந்தது என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது.கடந்த சனிக்கிழமை அதிகாலை சந்திரயான் 2ல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. அதிகாலை 1.48 மணிக்கு சந்திரயான் 2ன் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது.இப்போது வரை அதை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தனர்.ஆனால், லேண்டரை கண்டுபிடித்தாலும் இன்னும் அதனுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. லேண்டர் மற்றும் ஆர்பிட்டர் இடையே தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். ஆனால் லேண்டரில் இருந்து எந்த விதமான சிக்னலும் இன்னும் கிடைக்கவில்லை.இந்த சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நிலவில் மெதுவாக இறங்கவில்லை. வேகமாக இறங்கி இருக்கிறது. ஆனாலும், நிலவில் இது மோதி இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். அதேபோல் நிலவில் இது கொஞ்சம் சாய்வாக நிற்கிறது. அதனால் இது உடைந்து இருக்கவும் வாய்ப்பில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.ஆனாலும் விஞ்ஞானிகளுக்கு புரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. விக்ரம் லேண்டர் உடையவில்லை, அதேபோல் அது நிலவில் மோதி தவறாக கீழே விழுந்து கிடக்கவில்லை. ஆனாலும் அதில் இருந்து எந்த விதமான சிக்னலும் கிடைக்கவில்லை. ஏன் இப்படி நிகழ்ந்தது. என்ன காரணத்தால் அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது என்ற மர்மம் நிலவி வருகிறது.விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் அதனுடன் இணைப்பை ஏற்படுத்த முடியவில்லை. விக்ரம் லேண்டர் உடையாமல் இருந்தும் கூட ஏன் அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.அதேபோல் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் முன், 2.1 கிமீ தூரத்தில் இருக்கும் போதே சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டது. அதனால் நிலவில் வேகமாக இறங்கியதால் இதன் சிக்னலில் பிரச்சனை ஏற்படவில்லை. அதற்கு முன்பே அதில் ஏதோ பிரச்சனை நிகழ்ந்துள்ளது. அதனால்தான் 2.1 கிமீ தூரத்தில் உள்ள போதே அதனுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால், தொடர்ந்து விக்ரமில் இருக்கும் மற்ற சென்சார்கள் உடன் தொடர்பு கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். விக்ரம் உடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்றாலும் பிரக்யான் ரோவர் உடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *