வீட்டில் அதிர்க்ஷடத்தை கொட்டித் தரும் செல்லப் பிராணிகள்…!

செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் பலருக்கும் விருப்பமும் ஆர்வமும் அதிகம் உள்ளது. அவற்றுடன் நேரத்தைச் செலவிடும் போது மன அமைதி கிடைப்பதுடன், வேலை செய்து களைத்து வந்தவர்களிற்கு சக்தியை மீளப்பெறுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும். இதையெல்லாம் தாண்டி செல்லப் பிராணிகளை வீட்டில் வைத்திருப்பதனால் அதிர்க்ஷடம் தேடி வரும் என்று சொன்னால் நீனங்கள் நம்புவீர்களா?

அதிர்க்ஷடத்தை தேடித் தரும் செல்லப் பிராணிகள்.

1.பறவைகள்.
பறவைகள் என்றாலே வாய்ப்புக்களையும், புதிய தொடக்கம், அதிர்க்ஷ்டம், சுபீட்சமான வாழ்க்கையை அள்ளித் தருபவை. விலங்குகளை நேசிக்கும் சிலருக்கு அவற்றை கூண்டில் அடைத்து வைப்பதை விரும்ப மாட்டார்கள். பறவைகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தால் அவற்றை கூண்டில் அடைத்துத் தான் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவற்றை கூண்டில் அடைப்பதனால் நமது செல்வத்தையும் அடைத்து வைப்பது என்பதே பொருள்படும்.

அதற்கு பதிலாக பறவைகள் விரும்பும் வண்ணம் வீட்டுத் தோட்டத்தை அமைத்து, அதில் அவை குளிப்பதற்கான வசதிகள் செய்வதுடன், தானாகவே கூடு கட்டி வாழ்வதற்கான இடத்தைக் கொடுத்தால் பறவைகள் உங்கள் வீட்டிலேயே தங்கி விடும்.

அது மட்டுமல்லாது அவைகள் உண்ணும் உணவுகளை உங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே பெற்றுத் தருவதனால் அவை அங்கேயே விரும்பி வசிக்க ஆரம்பித்து விடும்.

2.நாய்.
நாய்களை வீட்டில் வளர்க்க ஆரம்பித்தால் அவை வீட்டுச் சூழலின் சக்தியை அதிகரிக்க வைப்பதுடன் உங்களையும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். நாய்கள் என்றாலே பாதுகாப்பிற்கும் விசுவாசத்திற்கும் எடுத்துக்காட்டு. வீட்டு நாய்கள் அல்லாமல் வேறு நாய்களைக் காப்பாற்றி வளர்த்தால் உங்கள் வீட்டைத் தேடி அதிக்ஷ்டமும் செல்வமும் வரப் போகின்றது என்று அர்த்தம்.

நாய்களை வீட்டில் வளர்க்க ஆரம்பித்து விட்டால் அவை வீட்டைச் சுற்றி ஓடவும், சிரிக்கவும், உங்களை பின்பற்றவும் பழக்கப்படுத்தி விடும். நாய்கள் நீங்கள் சொல்லிக் கொடுப்பவற்றை இலகுவாகக் கற்று அவற்றை ஆர்வத்துடன் செயற்படுத்தவும் பழக்கப்படுத்தி விடும்.

நாய்கள் வளார்ப்பதில் உங்களுக்கு போதிய வசதிகள் இல்லையென்றால் நாய் சிற்பங்களை வீட்டு முன் வைப்பதனால் வீட்டிற்கு பாதுகாப்பு கிடைக்கும்.

3.தவளை.
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் தவளைகள் இருந்தால் செல்வமும், அதிர்க்ஷ்டமும் உங்களைத் தேடி வருகின்றது எனப் பொருள்படும். அல்லது மூன்று கால்களை உடைய தவளை சிலையின் வாயில் நாணயத்தை வைத்து வைத்திருப்பதனால் செல்வத்தைப் பெருக்க முடியும்.
இந்த சிலைகளை வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைக்கும் போது முன் வாசலிற்கு எதிராக உள்ள அலுமாரியில் அல்லது தளபாடங்களின் மீது வைப்பதனால் செல்வத்தைப் பெருக்க முடியும். அதற்குப் பதிலாக சமையலறை, படுக்கையறை, குளியலறை போன்ற இடங்களில் வைப்பதனால் பண இழப்பையே சந்திக்க நேரிடும்.

4.சேவல்.
சேவல் பறவை இனத்தைச் சேர்ந்தது. இவை தன்னைச் சுற்றியுள்ள சூழலில் சிறந்த சக்தியை உருவாக்கி விடும். இவை சுபீட்க்ஷமான வாழ்க்கை மட்டுமல்லாது அரசியல் பிரச்சினைகளில் இருந்தும், போட்டி நிறைந்த வேலைத் தளங்களில் இருந்தும் பாதுகாப்பை பெற்றுத் தரக் கூடியது. மேலும் இவை வாழ்க்கையிலும், வேலைகளிலும் வெற்றியைப் பெறுவதற்கு உதவுகின்றது.

உங்களுக்கு இவற்றை வளர்ப்பதற்கான போதிய இடவசதிகள் இல்லையென்றால் சேவலின் படத்தை அலுவலக மேசை மீது வத்திருப்பதனால் பல பிரச்சினைகளாஇ இலகுவாக தீர்த்து விட முடியும்.

5.ஆமை.
ஆமை உங்கள் வீட்ட்டில் இருந்தால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், அதிர்க்ஷ்டம், வெற்றிகரமான வாழ்க்கை உங்களைத் தேடி வரும். அதனை வீட்டுத் தோட்டத்தில் உள்ள சிறு குளத்தில் வளர்க்க முடியும். குறிப்பாக வடக்குத் திசையில் வளர்ப்பது மிகவும் சிறப்பானது.

இல்லையென்றால் ஆமை, டிராகன் ஆமை சிலைகளை வைத்திருப்பதன் மூலமும் அதிர்க்ஷ்டத்தை அதிகரிக்க முடியும். ஆமை சிலைகளை வைக்கும் போது அவை எந்தப் பொருளால் ஆக்கப்பட்டது, அதனை வீட்டின் எந்தப் பகுதிகளில் வைக்கின்றோம் என்பதைப் பொறுத்து வாழ்க்கையின் அதிர்க்ஷ்டத்தை அதிகரிக்க முடியும். உதாரணத்திற்கு உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருப்பதற்கு மரத்தில் செய்யப்பட்ட ஆமையை கிழக்குப் பகுதியில் வைப்பது சிறந்தது.

6.மீன்.
உங்களது வாழ்க்கை செழிப்பானதாகவும், அதிர்க்ஷ்டமானதாகவும் இருப்பதற்கு வளர்க்க வேண்டிய மற்றொரு செல்லப்பிராணி மீன். அவை நீரில் நீந்தும் போது சிறந்த சக்தியை கொண்டு வருகிறது. மீன்களை நன்றாக பராமரிக்கப்படும் குளத்தில் அல்லது மீன் தொட்டிகளில் வைத்து வளர்ப்பது சிறப்பானது. குறிப்பாக கோய்(koi), அரோய்வனாஸ்(arowanas), தங்க மீன்(goldfish) போன்றவற்றையே அதிர்க்ஷ்ட மீன்கள் என்று கூறுவார்கள். உங்களால் மீன்களை வளர்ப்பதற்கு போதிய சூழ்நிலை கிடைக்கவில்லை என்றால் மீன்களின் ஒவியங்களை வைத்திருப்பதும் சிறப்பானதே.

முக்கிய குறிப்பு.
வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் போது அவற்றை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது அவசியமானது. அவ்வாறு வைத்திருந்தால் மட்டுமே அதிர்க்ஷ்டமும் சுபீட்க்ஷமான வாழ்க்கையும் உங்களைத் தேடி வரும். செல்லப்பிராணிகளை உங்களையும், உங்களது வீட்டு நபர்களையும் பார்ப்பது போன்று பராமரிப்பது அவசியமானது. விலங்குகள் உயிருடனோ அல்லது சித்திரங்கள், சிற்பங்களாக இருக்கும் போது அவை வீட்டிலும், வேலைத்தளங்களிலும் சிறந்த சூழ்நிலையை ஏற்படுத்தி விடும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *