கட்டிய பணத்தை கேட்கச் சென்ற நபர்! பாலியல் புகார் கொடுத்த பெண்.. ஷாக் வீடியோ

குமரி: “இங்க ஒருத்தன் வந்து என்கிட்ட தப்பா நடந்துக்கிறான்.. ஸ்டேஷன்ல தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா” என்று ஒரு பெண் போனில் பேசவும் மிரண்டு கொதித்துபோய்விட்டார் அந்த இளைஞர்! குமரியில் நடந்த இந்த சம்பவம்தான் வீடியோவாக பற்றிக் கொண்டு எரிகிறது.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கே. மணிகண்டன். இவரது குடும்பம் வறுமையில் சிக்கி தவிப்பது போலும்.

அதனால் வெளிநாட்டுக்கு போய் குடும்ப கடனை அடைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். இதற்காக 8 மாசத்துக்கு முன்பு வெளிநாடு செல்ல முடிவு செய்து, நாகை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள சாலோம் டிராவல்ஸில் பணமும் கட்டினார்.

மணிகண்டன்
ஆனால், நீண்ட நாட்களாகியும் டிராவல்ஸ் ஆபீசில் இருந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதை பற்றி தகவலும் சொல்லாமல் இருந்துள்ளனர். இதனால் கடுப்பான மணிகண்டன், வெளிநாடு போகவில்லையானாலும் பரவாயில்லை, பணத்தையாவது திருப்பி வாங்கலாம் என்று டிராவல்ஸ் ஆபீஸ் சென்றார்.

கெட்ட வார்த்தை
அங்கு இருந்து ஒரு டிராவல்ஸ் பெண் ஊழியரிடம், பணத்தை திரும்பி தருமாறு மணிகண்டன் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் பணத்தை தர முடியாது என்று சொல்லவும், மணிகண்டனுக்கு அதிர்ச்சியாகி விட்டது. என் பணத்தைதானே நான் கேட்கிறேன், என் பணத்தை எனக்கு தந்துடுங்க என்றதற்கு, அந்த பெண் இளைஞனை கெட்ட கெட்ட வார்த்தையில் பேச தொடங்கிவிட்டார்.

பாலியல் தொல்லை
“இப்படி ஒரு பெண் கெட்ட வார்த்தையில திட்டறீங்களே” என்று இளைஞன் கேட்டார். அதற்கு பெண் “பணம் தர முடியாது.. உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ.. இப்படியே இங்க நின்னு கேட்டுட்டு இருந்தால், எனக்கு பாலியல் தொல்லை குடுத்தேன்னு புகார் தந்துடுவேன்.. மண்ணெண்ணெயை ஊத்தி கொளுத்திபுடுவேன். என் கண்முன்னாடி நிக்காதே.. போயிடு” என்று மிரட்டல் விடுத்தவாறே செல்போனை எடுத்து காதில் வைக்கிறார்.

மிரட்டல் வீடியோ
இளைஞனோ, “நீங்க யாருங்க போன் பண்றணுதுக்கு.. என் பணத்தை குடுத்துடுங்க” என்று கதறுகிறார். ஆனால் அந்த பெண்ணோ, “என்கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துக்கறான்.. கிளம்பி வாங்க.. ஸ்டேஷன்ல உங்களுக்கு தெரிஞ்ச ஆளு இருக்கா” என்று கேட்கிறார். நியாயம் கேட்க வந்த இளைஞனை, பணம் தராமல் ஏமாற்றியதுடன், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் போலீசில் புகார் தர துணிந்த இந்த பெண்ணின் மிரட்டல் வீடியோதான் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *