வீட்ல நெய் இல்லயா? கவலையே படாதீங்க… அதே டேஸ்ட் தரும் 8 பொருள்கள் இருக்கே…!

‘நெய் மணக்கும் சமையல்’ என்று கூறுவோம். நெய் என்றாலே மனம் கவரும் நறுமணமும், சப்புக்கொட்ட வைக்கும் ருசியும்தான் நினைவுக்கு வரும். நெய்யில் செய்த இனிப்புப் பண்டங்களுக்கு மவுசு அதிகம். சுத்தமான நெய்யில் செய்யப்பட்டவை என்று சில கடைகளில் நாம் விரும்பி பண்டங்களை வாங்குவோம். வீடுகளிலும் நெய்யை பயன்படுத்தி செய்யப்படும் உணவுபொருளை விரும்பி சாப்பிடுவது வழக்கம்.

நெய்க்கு மாற்று உண்டா? நெய்யும் இல்லை; ஆனால், நெய்யால் செய்தமாதிரியும் இருக்கவேண்டும் என்று நினைத்தால், அதற்கும் சில வழிகள் உள்ளன. நெய்க்கு பதிலாக சமையலுக்கு எவையெவற்றை பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

நீர் நீக்கப்பட்ட வெண்ணெய் (Clarified Butter)
தண்ணீர் பிரியுமளவுக்கு மட்டுமே வெண்ணெயை சூடுபடுத்தினால் தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் கிடைக்கும். இதை மேலும் உச்ச அளவுக்கு சூடாக்கினால் மட்டுமே நெய்யாக மாறும். நெய் இல்லை. ஆனால், நீர் நீக்கப்பட்ட வெண்ணெய் மட்டுமே இருக்கிறது என்கிறீர்களா? பேஷ்! அதை பயன்படுத்தி ருசியாக பண்டங்களை செய்யலாம். நெய்போன்ற அதே சுவை வருவதற்கு சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள். ருசியை அடிச்சுக்க முடியாது!

ஆலிவ் எண்ணெய்
நெய் இல்லாத சமயங்களில் சமையலுக்குக் கை கொடுக்கும் திறன் ஆலிவ் எண்ணெய்க்கு உள்ளது. நெய் சேர்த்து வதக்குவதற்கு, பொரிப்பதற்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி பொரிக்கலாம். நெய்யில் வதக்கியதுபோன்ற அதே சுவையை தர வல்லது ஆலிவ் எண்ணெய்.

வெண்ணெய்
சாதாரண வெண்ணெய் சற்று உவர்ப்பு சுவை கொண்டது. இதைக் கொண்டும் நெய்யின் இடத்தை நிரப்பமுடியும். சாதாரணமாக கிடைக்கும் வெண்ணெயில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து அதன் பின்னர் பொரியல் செய்ய பயன்படுத்தலாம். அப்படிச் செய்தால் உணவு அதிகமாக செம்பழுப்பு நிறமடையாது.

தேங்காய் எண்ணெய்
நெய் இல்லாத குறையை போக்குவதற்கு நல்ல ருசியை பெறுவதற்கு தேங்காய் எண்ணெய் நல்ல மாற்றாகும். தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி சமையல் செய்தால் நறுமணம் நாசியை துளைக்கும்.

கனோலா எண்ணெய்
கிரில்லிங் எனப்படும் வாட்டுதல், கிளறி பொரித்தல் மற்றும் ஏனைய சமையல்களுக்கு கனோலா எண்ணெய் பயன்படுத்தலாம். காய்கறிகளை வதக்குவதற்கும், கறி வகை குழம்புகள் வைப்பதிலும் நெய்க்கு மாற்றாக கனோலா எண்ணெயை பயன்படுத்தலாம். நெய் பயன்படுத்தினால் எந்த அளவு எடுப்பீர்களோ அதே அளவு கனோலா எண்ணெய் பயன்படுத்துங்கள்; நல்ல பலன் கிடைக்கும்.

நல்லெண்ணெய்
சாலட்டுகள் மற்றும் உணவுகள் மேல் இலேசாக தெளித்து பயன்படுத்த நல்லெண்ணெய் உபயோகிக்கலாம். நல்லெண்ணெய் சமையலும் நறுமணம் மிக்கது. கிளறி பொரிக்கவேண்டிய உணவுகளுக்கும் இதை பயன்படுத்தலாம்.

சோயாபீன்ஸ் எண்ணெய்
மயோ என்னும் மயோனைஸ் செய்யும்போது நெய்க்குப் பதிலாக சோயாபீன்ஸ் எண்ணெய் பயன்படுத்தலாம். இது ருசியில் சற்று மாற்றத்தை உணரச் செய்யும். ஏனைய சமையலுக்கும் நெய்க்குப் பதிலாக சோயாபீன்ஸ் எண்ணெய் உபயோகிக்கலாம்.

சூரியகாந்தி எண்ணெய்
வாணலி என்னும் Pan பயன்படுத்தி ஏதோ ஒன்றை பொரித்துக்கொண்டிருக்கிறீர்கள். அப்போது நெய் குறைந்துபோனது. இன்னும் கொஞ்சம் நெய் வேண்டும். கடைக்கு ஓடிப்போய் வாங்கிக்கொண்டு வருவீர்களா? இதுபோன்ற நேரத்தில் சூரியகாந்தி எண்ணெயை பயன்படுத்தி பொரிக்கலாம். இது சற்றே புதிய சுவையையும் கொடுக்கும். சாலட் செய்வதற்கும் சூரியகாந்தி எண்ணெயை உபயோகிக்கலாம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *