ராஜகோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம்.. வியப்பில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்..!

கர்நாடக மாநிலத்தில் சிவன் கோவிலின் நிழல் தலைகீழாக நிகழும் அதிசயம் நிகழ்ந்து வருகிறது. கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியில் உள்ள துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவிலில் தான் இந்த அதிசயம் நிகழ்கிறது.

இந்த கோயிலை சாளுக்யா மற்றும் ஹொய்சலா வம்சத்தினர் கட்டியதாகத் தெரிகிறது. ஆனாலும் கிருஷ்ணதேவராயர் காலத்திலும் இந்தக் கோயிலில் பல திருப்பணிகள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. இந்த கோயிலின் ராஜகோபுரம் 165 அடி உயரம் கொண்டது. இதன் நிழல் தலைகீழாக விழுவது தான் இன்றுவரை புரியாத அதிசயமாக இருக்கிறது. ஒரு பொருளின் நிழலானது தலைகீழாக விழவேண்டுமென்றால் நிஜத்திற்கும் நிழலுக்கும் இடையில் கண்ணாடி போல ஏதாவது ஒன்று நிச்சயம் தேவைப்படும். ஆனால் இங்கு அப்படி எதுவும் இல்லாமல் இந்த கோயிலின் நிழல் எப்படித் தலைகீழாக விழுகிறது என்பதை யாராலும் கண்டறிய முடியவில்லை. இதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கோபுரத்துக்கும் சுவருக்கும் இடையே ஒரு துளை லென்ஸ் போல செயல்பட்டு கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழச் செய்கிறது என்று கூறியுள்ளனர். ஆனால் அவை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

கோவிலின் அமைப்பு..
இந்தக் கோவிலில் உள்ள மண்டபம் ஒன்றில் 114 தூண்கள் உள்ளன. மற்றொரு மண்டபத்தின் நடுவில் ஒரு வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு அதில் துங்கபத்ரா ஆற்றின் நீர் மடைப்பள்ளியை அடைந்து பின் வெளிப்பிரகாரம் வழியாக வெளியேறுகிறது.

கடந்த 1565ம் ஆண்டு படையெடுப்புகளால் இந்த நகரமே அழிந்தபோதும் இந்த கோயில் மட்டும் எந்த பாதிப்புமின்றி கம்பீரமாக காட்சி தருகிறது.

வடிகால் கால்வாய் முதல் வானளாவிய கோபுரம் வரை அனைத்திலும் மிகச்சிறந்த கட்டடக்கலையின் திறன் காண்போரை பிரமிக்க வைக்கிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *