2 மனைவிகள்.. உருட்டு கட்டையால் சரமாரி அடி.. ஒருவர் பலி.. இன்னொருவர் உயிர் ஊசல்

கோவை: “ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு என்னத்த குடுத்தீங்க.. ஒரே மயக்கமா இருக்கே” என்று கேட்ட கணவன், 2 மனைவிகளையும் உருட்டு கட்டையாலேயே அடித்து நொறுக்கிவிட்டார். இதில் முதல் மனைவி சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூரை சேர்ந்தவர் ரமேஷ். 35 வயதாகிறது. காலேஜ் ரோட்டில் கறி கடை வைத்துள்ளார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் சாந்தி. 2-வது மனைவி பெயர் திலகவதி. 2 மனைவிகளுடன் ரமேஷ் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.

ரமேசுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த குடிப்பழக்கம் 2 மனைவிகளுக்கும் பிடிக்கவே இல்லை. மேலும் ரமேஷ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால், 2 மனைவிகளையுமே அடித்து சித்ரவதை செய்வார்.

மாத்திரை
அதனால் ரமேஷிடம் மாட்டிக் கொண்டு 2 பேரும் அவஸ்தைப்பட்டனர். எப்படியாவது குடிப்பழக்கத்தில் இருந்து கணவரை மீட்க வேண்டும் என்று 2 பேரும் முடிவு செய்தனர். அதற்காக குடியை மறக்க பயன்படுத்தப்படும் மாத்திரையை வாங்கி ரமேஷூக்கு தந்தனர்.

ஆத்திரம்
இதை சாப்பிட்டதும் ரமேஷூக்கு மயக்கமாக இருந்தது. உடனே 2 மனைவிகளையும் கூப்பிட்டு, “எனக்கு என்ன தந்தீங்க.. இப்படி மயக்கமா வருதே” என்று கேட்டார். அதற்கு குடியை மறக்கதான் மாத்திரை தந்தோம் என்றனர். இதை கேட்டதும், ரமேஷுக்கு ஆத்திரம் வந்துவிட்டது.

ரத்த வெள்ளம்
அவர்களை அடிக்க ஏதாவது கையில் கிடைக்கிறதா என சுற்றுமுற்றும் பார்த்தார். ஒரு உருட்டுக்கட்டை கிடக்கவும், அதை எடுத்து 2 மனைவிகளையும் அடித்து உதைத்தார். இருவருமே வலியால் அலறி துடித்தனர். முதல் மனைவி சாந்தி அங்கேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

சரண்
சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் தகவல் தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்து, துடிதுடித்து உயிருக்கு போராடிய திலகவதியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனிடையே திருப்பூர் வடக்கு போலீசில் ரமேஷ் சரண் அடைந்துள்ளதால், அவரிடம் விசாரணை நடக்கிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *