இந்தியாவின் மூத்த அரசியல் பிரபலம் திடீர் மறைவு..!! பெரும் சோகத்தில் நாட்டு மக்கள்…!!

இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சற்று முன்னர் காலமானார்.தனது 66ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளார்.மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.முன்னாள் நிதி அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அருண் ஜெட்லி கடந்த 9ஆம் திகதி மூச்சுத்திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக கவலைக்கிடமாக இருந்த நிலையில் அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன.எய்ம்ஸ் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் அருண் ஜெட்லி பற்றி ஆராய்கிறது இந்த சிறு தொகுப்பு.அருண் ஜெட்லி (Arun Jaitley) டிசம்பர் 28, 1952 இல் பிறந்தார், இவர் இந்திய பதினாறாவது மக்களவையின் அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்துள்ளார்.தவிர பாதுகாப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பிலும் இருந்துள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞரும் ஆவார்.பதினைந்தாவது மக்களவையில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆய அமைச்சரவையில் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

2014 பொதுத் தேர்தலில், அமிர்தசரசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர், படைத்தலைவர் அமரிந்தர் சிங்கிடம் தோற்றார்.பஞ்சாபி இந்து பிராமணக் குடும்பத்தில் வழக்கறிஞர் மகராசு கிசன் ஜெட்லிக்கும் இரத்தன் பிரபா ஜெட்லிக்கும் மகனாகப் பிறந்த இவர், தனது பள்ளிக்கல்வியை டில்லியின் புனித சேவியர் பள்ளியில் 1957 முதல் 69 வரை பயின்றார்.பொருளியல் இளங்கலைப் பட்டத்தை சிறீராம் பொருளியல் கல்லூரியில் 1973இல் பெற்றார். 1997இல் சட்டப்படிப்பை டில்லி பல்கலைக்கழகத்தில் முடித்தார்.தனது மாணவப் பருவத்தில் கல்வித்திறன் மற்றும் பிற கல்விசாரா செயற்பாடுகளுக்காக பாராட்டுக்கள் பெற்றுள்ளார். 1974இல் டில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.ஜெட்லி மே 24, 1982இல் சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும் சோனாலி என்ற மகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *