நான் இதுவரை கேட்டதில் இவரின் பேச்சுத் தான் சூப்பர்…பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க சாபாநாயகர்..!

நான் இதுவரை பார்த்ததிலேயே இந்திய பிரதமர் மோடி ஒரு அற்புதமான பேச்சாளர் என, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி வானளாவ புகழ்ந்து தள்ளியுள்ளார்.வாஷிங்டன்னில் நடைபெற்ற அமெரிக்கா – இந்தியா கூட்டுறவு பொதுமன்ற நிகழ்வின் போது நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று பேசிய நான்சி, முன்னர் அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது தாம் இந்தியா சென்றதை நினைவு கூர்ந்தார். அப்போது தொழில் துறையினர் மத்தியில் இந்திய பிரதமர் மோடி பேசியதை தாமும் கேட்டதாக கூறினார். தாம் இதுவரை கேட்ட பேச்சுக்களிலேயே மிக அற்புதமான பேச்சு அது என பயங்கரமாக புகழ்ந்து தள்ளினார். அந்த கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசிய மோடி, கேட்பவர்களை தனது பேச்சால் கட்டிப்போடும் வகையில் பேசினார். தாம் சொல்ல வந்த கருத்துகளை சிறிதும் பிசிறில்லாமல், கூட்டத்தினரிடம் கொண்டு சேர்ப்பதில் வல்லவர் என மோடியை புகழ்ந்தார் நான்சி பெலோசி.

மேலும் பேசிய நான்சி, சிறு வயதில் தாம் தொப்பி அணிந்திருந்ததை பார்த்து, நீ என்ன மகாத்மா காந்தியா என பள்ளியில் எனது ஆசிரியை கேட்டார். அதன் பின்னர் தான் மகாத்மா காந்தி குறித்து தெரிந்து கொள்ள, பல புத்தகங்களை தேடித்தேடி படித்தேன். காந்திய தத்துவம் மற்றும் சிந்தனை மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது.அமெரிக்காவின் அகிம்சை இயக்கத்தின் ஆன்மீகத் தலைவராக மகாத்மா காந்தி இருந்தார். மேலும், அமெரிக்க சமூக ஆர்வலர் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு மகாத்மா காந்தி எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பது குறித்தும் நான்சி விவரித்தார்.சத்தியாக்கிரகத்தின் நோக்கம் அஹிம்சை மற்றும் சத்தியத்தை வலியுறுத்துவது, இதை தான் அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் செய்தார். உண்மைகளை வன்முறை வழியில்லாமல் எவ்வாறு உணர்த்துவது என்பதை காந்தி இவ்வுலகிற்கு கற்றுக் கொடுத்துள்ளார்.மேலும், ஒரு சுவாரசிய சம்பவம் தற்போது நினைவுக்கு வருவதாக நான்சி கூறி அதனை பற்றி விவரித்தார். நான் கல்லூரியில் படித்த போது நூலகத்திற்கு சென்று காந்தி பற்றிய புத்தகங்களை தேடி எடுத்து கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த எனது வகுப்பு தோழி ஒருவர், நீங்கள் காந்தி பற்றிய அனைத்து புத்தகங்களையும் தேடி எடுப்பதை பார்த்து கொண்டிருந்தேன்.என் தந்தை அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதராக உள்ளார். எனவே ஜின்னா பற்றிய புத்தகங்களை நீங்கள் தேடி எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என கூறியதாக நான்சி தெரிவித்தார். இதற்கு கூட்டத்தினர் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.மேலும் இந்தியா – அமெரிக்க உறவு மேலும் பலமாவதன் மூலமாக, ஒட்டுமொத்த உலகத்தையே கைதூக்கி விட முடியும். இதற்காக இருநாடுகளும் எப்போதும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *