பிக்போஸ்சில் முகேனுடன் சண்டையிட வனிதா தான் காரணமா? அபிராமி ஓபன் டாக்….

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலேயே கவினிடம் காதலை வெளிப்படுத்திய அபிராமி அந்த காதல் தோற்றுப் போக, முகேன் பின்னால் சுற்றினார்.

இதற்கு முகேன், தனக்கு ஏற்கனவே காதலி இருப்பதாகவும், அபிராமியுடன் நண்பனாக மட்டுமே பழகுவதாகவும் பதிலளித்தார். இருந்தாலும் முகேனை காதலித்து வந்த அபிராமி, வனிதா வந்த பின்னர் ஆக்ரோஷமாக மாறினார், இதற்கு வனிதா ஏற்றிவிட்டதே காரணம் என பலராலும் கூறப்பட்டது, இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள அபிராமி, கமல் எபிசோடிற்கு பின் முகேன் எனக்கு ஆதரவாக பேசாதது வருத்தமளித்தது.

வனிதாக்கா வந்ததும் மக்கள் என்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என கூறினார், அப்போதும் கூட முகேன் எனக்கு நம்பிக்கை கொடுக்கவில்லை, திரும்ப திரும்ப அதையே பேசிக் கொண்டிருந்ததால் விரக்தியில் அப்படி செய்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *