கொரோனாவால் கொல்லப்பட்ட நோயாளியின் நுரையீரல்..அதிரவைத்த காட்சிகள்!

சீனாவில் கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் வுஹான் சந்தையில் வேலை பார்த்த ஒருவர் கொரோனாவுக்கு பலியான நிலையில், அவரது எக்ஸ் ரேக்கள் எந்த அளவுக்கு அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டியுள்ளன.

அதிரவைக்கும் அந்த காட்சிகளில் ground glass opacity (நுரையீரலிலுள்ள காற்றுப்பைகள் பகுதியளவு நிரம்புதல்)என்னும் அசாதாரண மாற்றத்தைக் காண முடிகிறது.இரண்டு வாரங்கள் இருமல் மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்ட அந்த 44 வயது நபர், 2019ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 25ஆம் திகதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும், அவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.

வட அமெரிக்க Radiological Society வெளியிட்ட அந்த ஸ்கேன்களில் A முதல் F வரையிலான படங்களில், அந்த நபரின் நுரையீரலில், திரவத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே வருவதைக் காணமுடிகிறது.கொரோனா வைரஸ் எப்படி ஒரு மனிதனின் நுரையீரலை கடுமையாக பாதிக்கிறது அந்த படங்கள் காட்டுகின்றன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *