தன் தோற்றத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழும் 4 வயது சிறுமி!

நைஜீரியாவை சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர் தான் மிகவும் அசிங்கமாக இருப்பதாக கண்ணீர் விட்டு அழுத காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.குறித்த காணொளியில் சிறுமி தலைமுடியை அழகுபடுத்துகிறார். ஆனால் நான் மிகவும் அசிங்கமாக உள்ளேன் என்று தன்னை தானே தாழ்த்தி கொண்டு அழுகிறார்.பின்னர் குழந்தைக்கு தாய் நீ தன்னம்பிக்கை கொண்டவள், நீ பெரிய அளவில் வளர்ந்த பின்னர் சாதிப்பாய் என கூறுகிறார். இந்த காட்சிகளை இன்ஸ்டாகிராமில் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்துள்ளார்.குறித்த காணொளி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உலகளவில் வைரலானது. பலரும், சிறுமி மிகவும் அழகாக உள்ளார், கருப்பினத்தவர்கள் மிக அழகானவர்கள் தான் என பதிவிட்டனர்.இதையெல்லாம் பார்த்து மகிழ்ந்தோடு தன்னம்பிக்கை கொண்ட சிறுமி மீண்டும் ஒரு வீடியோவில் சிரித்தபடி தோன்றியுள்ளார். குறித்த காட்சியும் வைரலாகி வருகின்றது.

https://twitter.com/i/status/1235798915959656448

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *