அம்மா நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? திடீரென மாயமான தாயை தேடி கண்ணீர் விட்டு கதறும் பிள்ளைகள்!

கனடாவில் திடீரென மாயமான இந்திய வம்சாவளியினரான ஒரு பெண்ணின் பிள்ளைகள் தாயைக் காணாமல் கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் நியூ வெஸ்ட்மினிஸ்டர் பகுதியைச் சேர்ந்த நிர்லா ஷர்மா (44)இன் பிள்ளைகள் காலையில் எழுந்து பார்க்கும்போது அவர்களது தாய் வீட்டில் இல்லை.வாக்கிங் போயிருப்பார் என்று எண்ணலாமென்றால், அவர் உடன் அழைத்துச் செல்லும் நாய் வீட்டிலேயே இருக்கிறது.
அத்துடன், நிர்லாவின் சாவிக்கொத்து, பர்ஸ் மற்றும் மொபைல் போன் ஆகியவையும் வீட்டிலேயே இருக்கிறது.

சரி, அலுவலகத்திற்கு சென்றுவிட்டாரா என்று விசாரித்தால், அலுவலகத்திற்கும் வரவில்லை என்ற செய்தி கிடைக்க, பிள்ளைகள் இருவரும் மிரண்டுபோய் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.அம்மா, நீங்கள் எங்களை கைவிட்டு விட்டு போக விரும்பினால் கூட பரவாயில்லை, நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று சொல்லவாவது போன் செய்யுங்கள், நீங்கள் பத்திரமாக இருக்கிறீர்கள், உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்தால் கூட போதும் என்று கதறுகிறார் நிர்லாவின் மகள் வானஸா (20).அவரது மகன் ரிலேஷோ (19), எங்கிருக்கிறீர்கள் அம்மா, தயவு செய்து வீட்டுக்கு வாங்கள், உங்களை ரொம்ப மிஸ் பண்ணூகிறோம் என்று சொல்வதற்குள் கண்ணீர் பீறிட, கதறிக் கதறி அழுகிறார்.

தான் அழுதுகொண்டே தம்பியைத் தேற்றும் வானஸாவைப் பார்த்தால் பார்ப்பவர்களுக்கும் கண்ணில் கட்டாயம் கண்ணீர் வரும்.பொலிசார் நிர்லாவைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடியுள்ளார்கள்.

தங்கள் காரிலுள்ள டேஷ்கேம் கமெராவில் எங்காவது நிர்லா பதிவாகியிருக்கிறாரா என்று பார்க்குமாறும் மக்களை பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *