ஆப்ரேஷனின் போதும் கூட வயலின் வாசித்த இசைக்கலைஞன்; ஆச்சரியத்தை ஏற்படுத்திய சிலிர்க்கவைக்கும் வீடியோ

தனக்கு அறுவை சிகிச்சை நேரும்போதும் கூட வயலின் வாசித்த லண்டனை சேர்ந்த இசைக்கலைஞரின் வீடியோ ஒன்று ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் லண்டனை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் டர்மர். இவருக்கு 53 வயதாகிறது. இவருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு மூளையில் கட்டி ஒன்று வளர ஆரம்பித்தது கண்டறியப்பட்டது. அப்பொழுதிலிருந்தே அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டு வந்த இவர், இறுதியில் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டார்.

இந்நிலையில் லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜனவரி 31 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்பொழுது அறுவை சிகிச்சை நடந்துக்கொண்டிருக்கும் போதே மயக்க நிலையில் அவர் விழித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. விழித்துக்கொண்ட அவர் தனது வயலினை வாசித்தார்.

இது குறித்து டர்மருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ”ஒரு ஆண்டுக்கு சுமார் 400 அறுவை சிகிச்சைகளை நாங்கள் செய்கிறோம். ஆனால் அறுவை சிகிச்சையின் போது ஒரு நோயாளி கருவியை வாசிப்பது இதுவே முதல் முறை. டர்மரின் இடது கையில் முழு செயல்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டு, சந்தேகத்திற்கிடமான அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய 90 சதவீதத்திற்கும் அதிகமான கட்டியை அகற்ற முடிந்தது” என கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *