திருமணம் முடிந்த சில வினாடிகளில் தரையில் சரிந்து உயிரிழந்த மணமகன்!

திருமணத்தின் போது மணமகன் திடீரென தரையில் சரிந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானாவின் நிஜாமாபாத் நகரை சேர்ந்த கணேஷ் (25) என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


அதன்பின்னர் நடைபெற்ற ஊர்வலத்தின் போது கணேஷ் திடீரென மயங்கி தரையில் விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.இதுகுறித்து அவருடைய குடும்பத்தினர் கூறுகையில், திருமண ஊர்வலம் தாமதமாக துவங்கியது. DJ ஒலி அதிகமாக இருந்ததால் அசாதாரணமாக உணர்ந்த கணேஷ் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *