வேகமாக வந்த பேருந்து.. ஒன்றரை வயது விஷ்ணு காலில் ஏறியது.. அவசர சிகிச்சைக்கு பணம் தேவை.. உதவுங்கள்!

சாலை விபத்தால் கால்களில் அடிபட்டு போராடும் ஒன்றரை வயது குழந்தைக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்திடுங்கள்! ஒன்றரை வயதே நிரம்பிய இளம் பிஞ்சு விஷ்ணு குமாருக்காக உங்களிடம் உதவி கேட்கிறோம். அவரின் அப்பா முருகன் மெக்கானிக்காக இருக்கிறார். அவரின் அம்மா வீட்டை கவனித்துக் கொள்கிறார். திருவண்ணாமலையில் இருக்கும் குறுப்பேடு கிராமத்தில் இவர்கள் வசிக்கிறார்கள்.

அவர்கள் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள். ஒருநாள் விஷ்ணு வீட்டில் தூங்கி கொண்டு இருக்கும் போது, அங்கே வந்த மினி பேருந்து, தாறுமாறாக சாலையில் இருந்து விலகி, வீட்டிற்கு உள்ளே வந்தது. இதில் தூங்கிக் கொண்டு இருந்த விஷ்ணு படுகாயம் அடைந்தார். விஷ்ணுவின் காலில் பெரிய அளவில் அடிபட்டது. வலது காலின் எலும்பு முறிந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு பெற்றோர்கள் பதறிப்போனார்கள். உடனே குழந்தையை மியாட் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதன்பின், அவனின் காலில் எந்த அசைவும் இல்லை உணர்ச்சியும் இல்லை.

உடனே ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். அன்றில் இருந்து இன்று வரை, எனக்கு உடனே வீட்டிற்கு போக வேண்டும் அம்மா. என்னால் வலியை தாங்க முடியவில்லை. எனக்கு மாத்திரை வேண்டாம். என்னை உங்களுடன் வீட்டிக்கு கூட்டி செல்லுங்கள் என்று, விஷ்ணு அழுது கொண்டு இருக்கிறான். அவனது காலில் உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையென்றால் கால் மொத்தமாக செயலிழக்கும். ஆனால் அவனுக்கு சிகிச்சை மேற்கொள்ள அவனின் பெற்றோரிடம் பணம் இல்லை. அவனின் காலில் அறுவை சிகிச்சை செய்ய 2,50,000 ரூபாய் தேவை. ஆனால் விஷ்ணுவின் அப்பாவின் வருமானத்தில் இவ்வளவு பெரிய தொகையை செலுத்துவது மிகவும் கடினம்.

அவன் சிறிய குழந்தை. மிகவும் சுறுசுறுப்பாக இருப்பான். ஆனால் இப்போது நகர முடியாமல் படுத்து கிடக்கிறான். அவனை இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கிறது. நாங்கள் உங்களைத்தான் நம்பி இருக்கிறோம், என்று அவனின் குடும்பத்தார் தெரிவிக்கிறார்கள். விஷ்ணு உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும். நீங்கள் விஷ்ணு உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும். இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *