ஜாலி முடிந்ததும் ஜோலியை காட்டிய காதலன்.. பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட பெண்.. அதிர்ந்த போலீசார்!

ஸ்வப்னாவிடம், ஆசைவார்த்தை கூறி ஜாலியாக இருந்துவிட்டு, கல்யாணம் செய்ய மறுத்துள்ளார் இளைஞர்.. இதனால் ஆத்திரமடைந்த ஸ்வப்னா பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டுள்ளார்!!ஆந்திராவின் ராஜாமுந்திரி பகுதியைச் சேர்ந்தவர் வீரபாபு.. 20 வயதாகிறது.. ஐதராபாத்தின் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் தங்கி ஆட்டோ ஓட்டி வருகிறார்.. இவர் அடிக்கடி டிக்டாக் வீடியோ நிறைய பதிவிடுவார்.

அந்த வகையில், அதே பகுதியில் ஸ்வப்னா என்ற பெண்ணுடன் டிக்டாக் மூலம் அறிமுகமானார்.. ஸ்வப்னா ஒரு பியூட்டிஷியன்.. அவருக்கும் வயது 20 ஆகிறது. இவர்களின் நட்பு, நாளடைவில் பழக்கம் அதிகமாகி.. நெருக்கமானது. “உன்னை தான் கல்யாணம் செய்துகொள்வேன்” என்று பலமுறை சத்தியம் செய்து, தன் வீட்டிற்கு அழைத்து வந்து அடிக்கடி ஜாலியாக இருந்துள்ளார் வீரபாபு… இந்த நிலையில், தன்னை சீக்கிரமாக கல்யாணம் செய்துகொள்ளும்படி என வீரபாபுவிடம் ஸ்வப்னா கேட்டுள்ளார்.. ஆனால் அதற்கு வீரபாபு எடுத்த எடுப்பிலேயே மறுப்பு சொல்லி உள்ளார். அப்போதுதான் மிக மோசமான நிலையில் ஏமாந்துள்ளோம் என்பது ஸ்வப்னாவுக்கு புரிந்தது. உடனே நடந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் ஸ்டேஷனில் வீரபாபு மீது புகார் தந்தார்… போலீசாரும் இருதரப்பினரையும் அழைத்து பேசினர்.. ஆனால், வீரபாபு, ஸ்வப்னாவை கல்யாணம் செய்து கொள்ளவே முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்.

போலீசார் எவ்வளவோ சமாதானமாக பேசி பார்த்தும், அவரது பிடிவாதத்தை கண்ட ஸ்வப்னா அதிர்ந்தார்.. அதனால் ஒரு கட்டத்தில் இதனை பொறுக்க முடியாமல், கையில் வைத்திருந்த ப்ளேடை எடுத்து, தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.. போலீசார் முன்னிலையிலேயே நடந்த இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக ஸ்வப்னாவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இப்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை நடந்து வருகிறது.. போலீஸ் ஸ்டேஷனிலேயே இளம்பெண் தன் கழுத்தை பிளேடால் அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *