வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த இளைஞனுக்கு பெண்ணால் நேர்ந்த கதி! நள்ளிரவில் சுடுகாட்டில் கதறிய பரிதாபம்

வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த நபர் பெண்ணிடம் லட்சக்கணக்கான பணம், நகைகளை இழந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தமிழகத்தின் விழுப்புரத்தை சேர்ந்த பெருமாள் (24). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் சமீபத்தில் ஊர் திரும்பினார்.இந்த நிலையில் அதே ஊரில் உள்ள கன்னியம்மாள் என்பவருடன் நெருக்கமாக பழகி உள்ளார்.

இதை பயன்படுத்தி கொண்ட கன்னியம்மாள் பெருமாள் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதித்த 8.50 லட்சம் பணம், ஐந்து சவரன் நகை ஆகியவற்றை அவரிடம் ஆசை வார்த்தை பேசி பெற்றுக்கொண்டுள்ளார்.இந்நிலையில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட பெருமாள் தனது பணம் நகையை திரும்ப தருமாறு கேட்டுள்ளார்.இதனிடையே கன்னியம்மாள், பெருமாளிடம் நயந்து பேசி நள்ளிரவில் சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று அவருக்கு மொட்டையடித்து அவரை உட்கார வைத்து மாந்திரீகம் செய்துள்ளார்.

இதனால் பெருமாள் பயந்து கதறிபடி மிரண்டுள்ளார். வீட்டுக்கு வந்த பெருமாள் தனது செல்போனில் அழுதுகொண்டே பேசி அதனை பதிவு செய்துள்ளார். அதில், என்னிடம் பணம், நகைகளை பறித்துக்கொண்ட கன்னியம்மாள் சுடுகாட்டில் என்னை வைத்து பூஜை போட்டதிலிருந்து எனக்கு உடல் முழுவதும் எரிகிறது.தூக்கம் வரவில்லை. உடல் உபாதை அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் கன்னியம்மாள் தான். எனக்கு பில்லி சூனியம் வைத்து, மாந்திரீகம் செய்துள்ளார். அதிலிருந்து எனக்கு வாழவே பிடிக்கவில்லை என பேசியுள்ளார்.மேலும், கன்னியம்மாளும் அவர் மகனும் தான் என் சாவுக்கு காரணம் என பேசி தனது சகோதரி தேவிக்கு அனுப்பிவிட்டு பெருமாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதையடுத்து காவல் நிலையத்தில், கன்னியம்மாள் அவரது மகன் சூர்யா ஆகியோர் மீது பெருமாள் சகோதரி தேவி புகார் அளித்துள்ளார்.ஆனால் பொலிசார் இருவரையும் கைது செய்யாததால் பெருமாள் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் பொலிசார் சமாதானம் செய்த நிலையில் போராட்டத்தை கைவிட்டார்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *