கல்லூரி வளாகத்தின் முன் உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பேராசிரியை உயிரிழப்பு!

ஒருதலைக்காதல் விவகாரத்தில் உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கல்லூரி விரிவுரையாளர் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த அங்கிதா பிசுடே (25) என்பவர், கடந்த திங்கட்கிழமையன்று காலை 7.15 மணியளவில் தனது கல்லூரி வளாகத்தின் முன் மர்ம நபரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார்.

அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் வேகமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார், சம்பவம் நடைபெற்ற அன்றே விக்கி நாக்ரலே (27) என்கிற இளைஞரை கைது செய்தனர்.பக்கத்து வீட்டில் வசித்து வந்த விக்கி ஏற்கனவே திருமணமாகி, 7 மாத குழந்தைக்கு தந்தை என்பதால், அவருடைய காதலை அங்கிதா நிராகரித்துள்ளார்.

அப்படி இருந்தும்கூட, அவர் 3 மாதங்களாக அங்கிதா செல்லும் இடங்களுக்கு எல்லாம் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் எரிச்சலடைந்த அங்கிதா அவரை திட்டியுள்ளார்.அதற்கு பழிவாங்கும் விதமாகவே விக்கி, பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்தது விசாரணையில் தெரியவந்தது.இந்த நிலையில் 40 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த அங்கிதா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *