கொரோனா கொடூரம்! சாலையில் ஆடைகள் களையப்பட்ட நிலையில் மயங்கிய இளம்பெண்… வீடியோ

சீனாவில் காரை ஓட்டி சென்ற பெண்ணை பொலிசார் வலுக்கட்டாயமாக கீழே பிடித்து தள்ளி அவர் ஆடைகள் களைந்த நிலையில் கைது செய்த சம்பவத்தின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவில் இதுவரை கொரோனா வைரஸால் 908 பேர் உயிரிழந்துள்ளனர்.

40,000க்கும் அதிகமானோர் இந்த உயிர் கொல்லி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா காரணமாக நாட்டின் பல இடங்களில் சாலையில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.heilongjiang மாகாணத்திலும் இந்த தடை உத்தரவு உள்ளது. இந்நிலையில் இளம்பெண்ணொருவர் அங்குள்ள சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது காரை நிறுத்திய பொலிசார் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து கொண்டு கீழே தள்ளினார்கள்.
இதில் ஆடைகள் களைந்து அப்பெண் மயக்க நிலைக்கு சென்றார். ஆனாலும் அவரை விடாத பொலிசார் தூக்கி கொண்டு போய் பொலிஸ் வேனில் ஏற்றி கைது செய்தார்கள்.இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.இதை பார்த்த இணையதளவாசிகள், ஏன் அப்பெண்ணை இப்படி கொடுமைப்படுத்துகிறார்கள், அவர் எதனால் மயக்கமடைந்தார் என கேள்வியெழுப்பியுள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *