கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்: திருச்சியில் அரங்கேறிய கொடூரம்!

வேலைக்கு போகச்சொல்லி வற்புறுத்தியதால் கர்ப்பிணி மனைவியை, கணவனே கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணி – கண்ணம்மா என்கிற தம்பதியின் மகள் ஜீவிதா. தொழில் காரணமாக குடும்பத்துடன் திருச்சிக்கு குடிபெயர்ந்த சுப்ரமணி, பொறியியல் பட்டதாரியான தனது மகளுக்கு வரன் தேட ஆரம்பித்துள்ளார்.

அப்போது வழக்கறிஞர் செல்வராஜ் என்பவரின் மகன் கமல்காந்த் என்பவர், சிங்கப்பூரில் பொறியாளராக பணியாற்றுவதாகவும், அவருக்கும் பெண் தேடி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து இருவீட்டாரும் பேசி முடித்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின்போது 80 சவரன் தங்க நகைகளும் ஒரு சொகுசுக் காரும் வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர்.ஆனால் திருமணம் முடிந்து கமல்காந்த் வேலைக்கு செல்லாமல் 7 மாதங்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த ஜீவிதா நேற்று காலை, வேலைக்கு செல்லுமாறு கமல்காந்தை வற்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கமல்காந்த், ஜீவிதாவை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவருகையில், ஒரு கையின் நரம்பை அறுத்துக்கொண்டு ரத்தத்துடன் கமல்காந்த் வெளியில் வந்துள்ளார்.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கமல்காந்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், ஜீவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஜீவிதாவின் பெற்றோர் தாங்கள் கொடுத்த புகாரின் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்யாமல், வழக்கறிஞருக்கு ஆதரவாக செய்லபடுவதாக குற்றம் சுமத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் நேற்று மாலை வரை பிரேத பரிசோதனை நடைபெறவில்லை.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *