யாரும் என் பொண்டாட்டியை பார்க்க கூடாது.. தலையை மொட்டை அடித்து.. ரூமுக்குள் பூட்டி வைத்த விநோத கணவன் .!

தன் மனைவி அழகாக இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த கணவன், அவரது முடியை வெட்டிவிட்டார்.. அந்த கொடுமை உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மீரட் நகரை சேர்ந்தவர் ஆரிப். இவரது மனைவி ரோஷினி… கல்யாணம் ஆகி சில வருடங்கள் ஆகிறது. ஆரிப்பை விட ரோஷினி ரொம்ப அழகாக இருப்பாராம்… அதனால் தாழ்வு மனப்பான்மையில் விழுந்துவிட்டார் ஆரிப்.. இது போக சந்தேக குணமும் ஆரம்பமாகி உள்ளது.

மனைவிக்கு வேறு ஒரு நபருடன் கள்ள உறவு இருக்குமோ என்ற சந்தேகம் அதிகமாகி விட்டது.. அதனால் வீட்டை விட்டு ரோஷினியை எங்குமே அனுப்பவில்லை. அழகாக இருப்பதால்தானே மனைவியை அடுத்தவர்கள் பார்க்கிறார்கள் என்று நினைத்து, ரோஷினி தலைமுடியை வெட்டிவிட்டார்.. பிறகு ஒருநாள் திடீரென மொட்டையே அடித்துவிட்டார்.. வீட்டில் ஒரு ரூமில் தினமும் பூட்டி வைத்துவிட்டுதான் ஆபீசுக்கு போய்வந்தார் ஆரிப்.ஒருநாள் இந்த தொல்லையில் இருந்து, யாருக்கும் தெரியாமல் தப்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிவந்தார் ரோஷினி.. கணவன் தந்த கொடுமை குறித்து போலீசில் புகாரும் தந்தார். “எதுக்கெடுத்தாலும் தன்னை அடிப்பார், காரணமே இருக்காது.. மாமியாரும், புருஷனும் சேர்ந்து எனக்கு மொட்டை அடித்துவிட்டனர், ரூமில் அடைத்து பூட்டிவிட்டனர்” என்று போலீசில் கண்ணீருடன் கூறினார் ரோஷினி.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *