கொரோனா வைரஸ் அச்சம்: சீனாவிற்கு சென்று தமிழகம் திரும்பியவர்களுக்கு கட்டுப்பாடு!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சீனாவிற்கு சென்று திரும்பிய தமிழர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர், கோவையை சேர்ந்த 4 பேர், சென்னை மற்றும் திண்டுகலை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 8 பேர் சீனாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று உள்ளதா என்று சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்று சுகாதாரத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும், 28 நாட்களுக்கு பொதுவெளியில் நடமாடவேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அறிவுத்தியுள்ளது. தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.அவர்கள் தொழில் மற்றும் படிப்பு சார்ந்த காரணங்களால் சீனா சென்று திரும்பியவர்கள் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *