புலியிடம் சிக்கிய நபர்.. சிறு காயமும் இல்லாமல் சாமர்த்தியமாக உயிர் தப்பும் வீடியோ காட்சி

மகாராஷ்டிரா மாநிலம் பாந்தரா மாவட்டத்தில் புலியிடம் சிக்கிக்கொண்டவர் சாமர்த்தியமாக உயிர் தப்பிய வீடியோ காட்சி ஒன்று வேகமாக பரவி வருகிறது.மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த பாந்தரா மாவட்டத்தில் விவசாய நிலப்பகுதிக்குள் புலி ஒன்று சனிக்கிழமை அன்று புகுந்துள்ளது.அவர் உடனடியாக கீழே படுத்து தரையோடு தரையாக மூச்சு பேச்சு இல்லாதவரை போல் அசையாமல் இருந்தார். அசைவே இல்லாமல் இருந்ததால் அந்த புலி அங்கேயே அமர்ந்து காத்துக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட பொதுமக்கள் ஒன்றாகக் கூடி கூச்சலிட ஆரம்பித்தனர். சிலர் அருகே இருந்த மரத்தில் கத்த ஆரம்பித்தனர்.

பின்னர் பலரரும் தன்னை நோக்கி வருவதை கண்ட புலி, பின் சாலையைக் கடந்து தெறித்து ஓடீயது. அதன்பின் சிக்கிக் கொண்ட அந்த நபர் எழுந்து மிக இயல்பாக நடந்து சென்றார்.. அவருக்கு ஆயுள் கெட்டி என்று அங்கிருந்தவர்கள் பேசியபடி இந்தக் காட்சியை செல்போனில் வீடியோவாக பதிதிருக்கிறார்கள். இதை பர்வீன் கஸ்வான் என ஐஎப்எஸ் அதிகாரி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

https://twitter.com/i/status/1221078080778694656

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *