தாயகத்து கலைஞர்களின் கலைப்படைப்புக்களுக்கு கரம் கொடுக்கும் ஐரோப்பிய வாழ் தமிழ் உறவுகள்..!

வட இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பிரபலமாக இயங்கி வரும் கைத்தொழில் பேட்டையில் பணிபுரியும் யாழ்ப்பாணத்து கலைஞர்களினால் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட தேங்காய்ச் சிரட்டையை மூலப் பொருளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள் சந்தையில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

யாழ்ப்பாணக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான இந்த அலங்காரப் பொருட்கள் வெறும் கைகளினால் ,மிக அழகாகவும், மிகவும் நேர்த்தியான முறையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் வடபுலத்தே போரினால் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து மீண்டெழுகின்ற தமிழ் மக்களின் எண்ணக்கருக்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த அற்புதமான கலைப்படைப்புக்கள், புலம்பெயர் தேசங்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் கலைஞர்களின் உள்ளுர் உற்பத்திகளுக்கு, தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற ஐரோப்பிய தேச நாடுகளில் இவற்றிற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும் .

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *